இந்த 4 வீரர்களை அடுத்தாண்டு ரிலீஸ் செய்து விடுங்கள், 12 முதல் 14 கோடிகள் தேறும் – பெங்களூர் நிர்வாகத்திற்கு ஆகாஷ் சோப்ரா கொடுத்துள்ள ஐடியா

0
500

14 வருடங்களாக கோப்பையை வெல்ல காத்திருந்த பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதி நேரத்தில் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை அபாரமாக வெற்றி தகுதிச்சுற்று இரண்டிற்கும் முன்னேறியது.

2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. 14 வருடங்கள் உடன் இந்த ஆண்டும் சேர்த்து 15 வருடங்களாக அந்த அணி கோப்பையை வெல்லாமல் இருப்பது அந்த அணி ரசிகர்களை வேதனை அடையச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இருப்பினும் பெங்களூரு அணி இந்த ஆண்டு விளையாடிய அனைத்து போட்டியிலும் சிறப்பாக விளையாடிய காரணத்தினால், அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த நான்கு வீரர்களை நீக்கிவிடுங்கள் 12 முதல் 14 கோடிகள் தேறும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்திற்கு ஒரு யோசனை கொடுத்துள்ளார்.”முகமது சிராஜ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், டேவிட் வில்லி மற்றும் அனுஜ் ராவத் இந்த நான்கு வீரர்களை நீங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்து விடுங்கள். இவர்கள் ரிலீஸ் செய்வதன் மூலம் உங்களுக்கு 12 முதல் 14 கோடிகள் கிடைக்கும்.

- Advertisement -

முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கு நீங்கள் கைப்பற்றி இருக்கிறீர்கள். அவரை ரிலீஸ் செய்து இன்னும் குறைவான தொகைக்கு அவரை மீண்டும் பெறலாம். விராட் கோலி மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஓபனிங் விளையாடும் பொழுது அனுஜ் ராவத் விளையாட வாய்ப்பு கம்மி தான். அவரது கணக்கில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் இருக்கின்றது. டேவிட் வில்லி மற்றும் ரூதர்போர்ட் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்க வாய்ப்பு இல்லை.

எனவே இந்த நான்கு வீரர்களை நீங்கள் ரிலீஸ் செய்து 12 முதல் 14 கோடி வரை தேற்றிக் கொள்ளலாம். இந்தத் தொகையை கொண்டு அணியில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று யோசனை கொடுத்துள்ளார்.