இந்திய கிரிக்கெட்

19.36.. 7வது சம்பவம்.. ஆஸி பவுலர்கள் சொந்த மண்ணில் செய்யாத காரியம்.. பும்ரா தனி சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களே செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே எடுத்துச் சுருண்டது. இந்திய அடியேன் தரப்பில் நிதீஷ் குமார் ரெட்டி மிக அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஹேசில்வுட் நான்கு விக்கெட் வீழ்த்தினார். இந்திய பேட்ஸ்மேன்களில் அணுகுமுறை மிகவும் சுமாராக இருந்தது.

பதிலடி தந்த பும்ரா

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு பும்ரா பதிலடி கொடுத்தார். நேற்று கேப்டன் பும்ரா நான்கு விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று மீண்டும் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி வந்தது.

ஆஸ்திரேலிய அணி உள்ளே வந்ததுமே அலெக்ஸ் கேரி விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி இறுதியாக 104 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பும்ராவுக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 11 வது ஐந்தாவது விக்கெட் ஆகும்.மேலும் சேனா நாடுகளில் மட்டும் இது ஏழாவது டெஸ்ட் ஐந்து விக்கெட் ஆகும்.

- Advertisement -

ஆஸ்திரேலியர்களே செய்யாத சாதனை

ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த பவுலிங் ஆவரேஜ் வைத்து பும்ரா சாதனை செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியா நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் பவுலிங் ஆவரேஜை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

19.36- ஜஸ்பிரித் பும்ரா
19.87-பாட் கம்மின்ஸ்
22.43 க்ளென் மெக்ராத்
22.67 ஜோஷ் ஹேசில்வுட்
24.68 ஜேசன் கில்லெஸ்பி
25.47 மிட்செல் ஜான்சன்
26.10-மிட்செல் ஸ்டார்க்
28.72-பிரெட் லீ

இதையும் படிங்க : 43 வருடம்.. இந்த நூற்றாண்டில் பாகிஸ்தானை தாண்டி.. இந்திய அணி ஆஸியில் சாதனை.. முக்கிய பட்டியலில் மூன்றாவது இடம்

மேலும் சேனா நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி ஜாகிர் கான் சாதனையை முறியடித்திருக்கிறார்.

7 முறை – ஜஸ்பிரித் பும்ரா*
7 முறை – கபில் தேவ்
6 முறை – ஜாகீர் கான்
6 முறை – பி சந்திரசேகர்

- Advertisement -
Published by