காயத்தில் தவிக்கும் பும்ரா ! டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிப்பாரா ?

0
160
Jasprit Bumrah and Rohit Sharma

ஆசிய கோப்பை 2022, இந்திய அணிக்கு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. பிரிவு போட்டிகளில் அதிரடி காட்டியப் பின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து நாக் அவுட் ஆனது. இந்த இரண்டு தோல்விகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சு தான் பொறுப்பேற்கிறது. 2 போட்டிகளின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமார் ரன்களைக் கட்டுப்படுத்த தவறினார். ஹாங் காங் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை.

இதனால் இந்திய ரசிகர்கள் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டுமென சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆசியக் கோப்பையில் பாதியிலேயே வெளியேறினாலும் ஒட்டுமொத்த இந்தியாவும், இல்லை இல்லை உலகெங்கும் இருக்கும் விராட் கோஹ்லி ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத ஓர் தொடர். பல நாள் கெடுப்பில் கிடந்த விராட் கோலியின் 71வது சர்வதேச சதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வந்தது. 2 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என மொத்தம் 276 ரன்கள் குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார். நாயகன் மீண்டும் வந்துவிட்டார் என்பதை பலத்த சத்தத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

அனைவரது கவனமும் தற்போது டி20 உலகக் கோப்பை பக்கம் திரும்பியுள்ளது. 2022 டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியா & தென் ஆப்ரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் இந்திய வீரர்கள் மோதவுள்ளனர். இது பயிற்சி ஆட்டங்கள் போல உதவும். அதற்கு முன் பிசிசிஐ டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை அறிவிக்க வேண்டும். செப்டம்பர் 16ஆம் தேதியே காலக்கெடுவை.

காயத்தில் தவிக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள்

கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அடுத்தது காயமடைந்து பல போட்டிகளை தவறவிட்டுள்ளனர். நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் கூட முதல் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா, ஸ்கேட் போர்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததால் உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியும் உள்ளார். விளையாட்டு வினை ஆயிற்று ! ஜடேஜாவின் இந்தக் காயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய நட்சத்திர வீரர் பும்ரா, அடுத்து நடந்த ஜிம்பாப்வே மற்றும் ஆசிய கோப்பை இரண்டிலும் பங்கேற்கவில்லை. அவர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன. இன்னும் அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியவில்லை. மாபெரும் ஐசிசி தொடரில் அனுபவமுள்ள தரமான பந்துவீச்சாளர் நிச்சயம் தேவை. அதிலும் பும்ரா மிக முக்கியமாக தேவை.

- Advertisement -

பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு டெத் ஸ்பெசலிஸ்ட் ஹர்ஷல் பட்டேலும் காயதால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் உடல்நிலை ஓரளவு தெரியுள்ளதாகவும் அடுத்து நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் அவர் களமிறங்கப் போவதாகவும் கூறுகின்றனர். ஹர்ஷல் பட்டேலின் வருகை இந்திய அணிக்கு வலுவை ஊட்டும். நவம்பர் மாதம் முதல் இந்திய அணிக்கு அதிக டி20 ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் இவர் தான். மேலும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் தவிக்கும் இந்திய அணியின் பிரச்சனையை இவர் தீர்த்து வைப்பார்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் நிலை

ஆசிய கோப்பை 2022இல் இந்திய அணிக்காக வேகப்பந்து துறையில் புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆடினர். முக்கிய 2 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் கை கொடுக்காமல் போக இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. அந்த 2 போட்டிகளும் அர்ஷ்தீப் சிங் அபாரமாக செயல்பட்டார். கடைசி ஓவரில் தன்னால் முடிந்ததை செய்த்தார் ஆனால் வெற்றி இந்திய அணியின் பக்கம் திரும்பவில்லை.

இருப்பினும் அர்ஷ்தீப் சிங்க்கு போதுமான பாராட்டுகள் கிடைத்தன. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நிச்சயம் ஆஸ்திரேலியா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் ஹால் எடுத்து நம்பிக்கை எழுதுள்ளார்.

இவர்கள் தவிர இன்னும் தீபக் சாஹர் மற்றும் முஹம்மத் ஷமி காத்திருக்கின்றனர். ஏப்ரல் மாதம் காயமடைந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் வெளியேறிய தீபக் சாஹர் தற்போது முழு உடல் தகுதியுடன் வந்துள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஷமியும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. கடந்த டி20ஐ உலகக் கோப்பையில் அவர் கடைசியாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில போட்டிகளில் கொடுத்த வாய்ப்பை வீனாக்கிய ஆவேஷ் கான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என தோன்றுகிறது.

இந்த காயங்களைத் தாண்டி ஆஸ்திரேலியா செல்லும் வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்பதை பிசிசிஐ தான் தீர்மானிக்கும். ஆஸ்திரேலியா ஆடுகளங்களுக்கு ஒரு ஸ்விங் பவுலர் போதும் என எண்ணி பிசிசிஐ அதற்கேற்றவாறு வீரர்களை தேர்வு செய்யும். விராட் கோலி மீண்டும் பழைய ரன் மிஷினாக திரும்பியுள்ளதால் இம்முறை இந்திய அணி சிறப்பான அணியோடு சென்று கோப்பையை வெல்லும் உத்வேகத்தில் உள்ளது.