ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பும்ரா புதிய சாதனையைப் படைக்க விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் பும்ரா தனி சிறப்பான செயல்பாட்டுடன் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அதே சமயத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
94 வருட பும்ரா சாதனை
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தற்பொழுது பும்ரா 94 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஹேசில்வுட் 843, பேட் கம்மின்ஸ் 837 புள்ளிகள் எடுத்து அடுத்த இரண்டு இடங்களில் இருந்து வருகிறார்கள். மேலும் முதல் 10 இடங்களில் இந்திய பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 750 புள்ளிகள் எடுத்து பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் 94 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசி தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளை தாண்டிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார். பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி அதிகபட்சமாக 937, சுனில் கவாஸ்கர் 916 புள்ளிகள் எடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி ரோகித் சர்மா பெரும் சரிவு
விராட் கோலி 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக செயல்பட்ட காரணத்தினால் 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்பொழுது மீண்டும் மோசமான பேட்டிங் செயல்பாட்டின் காரணமாக 10 வருடங்கள் கழித்து 633 புள்ளிகள் உடன் 24வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். கில் 645 புள்ளிகள் உடன் 20வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : பும்ரா இல்லனா.. இந்திய அணி எங்களுக்கு மேட்டரே இல்ல.. நான் பெரிய ஃபேன் – மெக்ராத் பேச்சு
மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆறு வருடங்கள் கழித்து 40வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அவர் தற்பொழுது 560 புள்ளிகள் உடன் இருக்கிறார். மேலும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜெய்ஸ்வால் 854 புள்ளிகள் உடன் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஜோ ரூட் 845, ஹாரி புரூக் 876, கேன் வில்லியம்சன் 867 புள்ளிகள் உடன் முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.






