பும்ரா, முகமது சமி இவங்க டீம்ல ரொம்ப நாள் இருக்க மாட்டாங்க – ரோகித் சர்மா திடுக்கிடும் பதில்!!

0
110

இந்திய அணியின் வருங்கால வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் இணைந்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை வளர்ப்பதற்கு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு இளம் வீரர்கள் பலரையும் பயன்படுத்தி வந்தனர்.

- Advertisement -

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் ஆதிக்கம் செலுத்தி டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றவும் செய்திருக்கிறது. தற்போது அந்த வீரர்களுக்கு 30 வயதுக்கும் மேல் ஆகிறது. குறிப்பாக பும்ரா, முகமது சமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்றோர் இன்னும் ஒரு சில ஆண்டுகளே முழு உடல்தகுதியுடன் விளையாட முடியும். தற்போது இளம் வேகபந்துச்சாளர்களை உருவாக்குவதற்கான சரியான தருணம் வந்துவிட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்திருக்கிறார்.

“பும்ரா, முகமது சமி போன்றோர் இன்னும் நீண்ட காலம் இந்திய அணிக்கு விளையாட போவதில்லை. ஆகையால் நானும் ராகுல் டிராவிட்டும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு வருகிறோம். அவ்வபோது அவர்களுக்கு வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு வீரர்கள் இருக்கின்றனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த தருணத்தில் வெளியில் இருக்கும் வீரர்கள் பயன்படுத்தப்படுவர். தொடர்ந்து வெளியில் அமர்ந்திருக்கும் வீரர்களின் பலத்தை அதிகப்படுத்தி வருகிறோம். அவர்களுக்கும் சரியான தருணத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்படும்.” என்றார்.

- Advertisement -

மேலும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை பற்றி பேசிய ரோஹித் சர்மா கூறுகையில், “ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை இரண்டிற்கும் கிட்டத்தட்ட 80 சதவீத வீரர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். இன்னும் ஒரு சில இடங்களுக்கு போதிய வீரர்களை கவனித்து வருகிறோம். அனுபவம் மற்றும் இளம்வீரர்கள் என இரண்டும் கலந்து கலவையாக இந்திய அணி உருவாக்கப்பட்டு வருகிறது. ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்வது முதல் நோக்கம். அதற்கு அடுத்ததாக இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும் சிந்தித்து வருகிறோம்.” என்றார்.