தம்பி சூர்யா பேட்டிங் கோச் கூட டைம் செலவு பண்ணுப்பா… கவாஸ்கர் அட்வைஸ்!

0
45
Gavaskar

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் வைத்து நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் தற்பொழுது மோதி வருகின்றன.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு
நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டிக்கு திரும்பி வந்தார். இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. தற்பொழுது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது.

நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தரப்பில் மிகவும் கவலைக்குரிய விஷயமாக சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழந்த முறை அமைந்திருக்கிறது. அவர் இரண்டு ஆட்டத்திலும் தான் சந்தித்த முதல் பந்திலையே மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஒரே மாதிரி ஆட்டம் இழந்தார்.

இந்த காரணத்தால் அவர் அடுத்து சென்னையில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் அணியில் இருப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்கின்ற விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் சூரிய குமாருக்கு பேட்டிங்கில் உள்ள பிரச்சனை என்னவென்று கவாஸ்கர் மிக எளிமையாக அருமையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து கூறியுள்ள கவாஸ்கர்
” அவர் தற்பொழுது பேட்டிங் டெக்னிக் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். அவர் பேட்டிங் செய்ய நிற்கையில் ஸ்டம்பை ஓபன் செய்து நிற்கிறார். இது டி20 கிரிக்கெட்டுக்கு நல்லது. ஏனென்றால் ஓவர் பிட்ச் செய்யப்படும் எந்த ஒரு பந்தையும் சிக்ஸராக அடிக்க இப்படி நிற்பது உதவும். ஆனால் இங்கே பந்தை காலுக்கு மிக நெருக்கமாக வலது புறம் வைக்கும் பொழுது, பேட் கண்டிப்பாக குறுக்கே தான் வருமே தவிர நேராக வரவே வராது. எனவே பந்து உள்ளே திரும்பினால் அவர் சிரமப்படுவார். இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவர் பேட்டிங் பயிற்சியாளர் உடன் நேரம் செலவு செய்து முடிவை கண்டுபிடிக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!

சூரிய குமாருக்கு மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறுகையில் ” பென்ஞ்சில் இருக்கும் வீரர்கள் இந்திய அணியில் நுழைய கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே எல்லா வீரர்களுமே கதவுக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறார்கள். சூரிய குமாரும் தானே கதவை திறந்து அணிக்குள் வந்தார். அவரை நீக்குவது பற்றி இந்திய அணி சிந்திக்குமா என்பது சந்தேகமே. அவர்கள் அப்படி சிந்தித்தால் நான் நிச்சயம் அதிர்ச்சி அடைவேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -