ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பே இல்லை.. இந்த வருஷம் உலககோப்பையை எந்த அணி தட்டிச்செல்லும்? – ஜாம்பவான் பிரெட் லீ கொடுத்த அருமையான பதில்!

0
722

இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தனது பதில் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் பிரெட் லீ.

கிரிக்கெட் உலகில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கோலாகலமாக நடத்தப்படும் 50 ஓவர் உலகக் கோப்பை, இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது என்பது கூடுதல் சிறப்பு. கடைசியாக இந்தியாவில் 2011ஆம் ஆண்டு நடந்தது. அதில் இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பையை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற அவப்பெயர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இருந்து வருவதால், இம்முறை இந்தியாவில் நடக்கும் வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பல அணிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த கண்டிஷனுக்கு ஏற்றவாறு தங்களது அணியை தயார் செய்கின்றன. இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் 7 போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் இந்திய அணி, இந்த வருடம் கோப்பைகளில் வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கட்டாரில் நடைபெற்று வரும் லெஜெண்ட் கிரிக்கெட் தொடரில் உலக ஜெயின்ட்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் பிரெட் லீ, ஸ்போர்ட்ஸ் யாத்திரி பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

கடைசியாக, இந்த வருடம் உலககோப்பை வருடம். ஆகையால் உங்களது கணிப்பில் கோப்பையை வெல்லும் அணி எது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும். அவர்களது மண்ணில் நடக்கிறது. உக்காகிலேயே அதிக அளவில் உணர்வுபூர்வமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் இந்திய அணி சாதாரணமாக விளையாடுவதை விட இன்னும் அதிபயங்கரமாக இருப்பர். சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.” என்றார்.