“டி20 உலககோப்பையை எடுத்து இந்தியாவுக்கு கொடுங்கப்பா“– பிராட் ஹோட்ஜின் வலிமையான இந்திய அணி

0
2243
Brad Hogg

அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது போல கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது டி-20 உலகக்கோப்பை போட்டியை தான் . பல அணிகள் தங்கள் அணியை பலப்படுத்தி வருகின்றனர். பல முன்னால் வீரர்களும் கிரிக்கெட் ஆய்வர்களும் தங்களது விருப்பமான X1 அறிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய வீரரும் வர்னனையாளருமான ஆகாஷ் சோப்ரா ரோஹித் ஷர்மா , விராட் கோலி ஜோடியை தொடக்கவீரர்களாக இருப்பார்கள் என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார் . அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹோட்ஜ் அவருடைய இந்திய அணியின் XI தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2021-ல் விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக துவக்க வீரராக களமிறங்கியதை சூசகமாக சுட்டிக்காட்டி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரையும் தொடக்கவீரர்களாக புதிய யோசனையை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“ எனது இந்திய அணையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் தொடக்கவீரர்களா களமிறங்குவார்கள். சற்று ஷிகர் தவன் மீது கடினமாக உள்ளேன் அவர் அதிரடி ஆட்டத்திற்கு மாறவேண்டும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதினால் இளம் வீரர் சூரியகுமார் யாதவ் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் நான்காம் வரிசையிலும், ரிசப் பண்ட் ஐந்தாம் வரிசையிலும் ஹர்டிக் பாண்டியா ஆறாம் வரிசை , ரவீந்திர ஜடேஜா ஏழாவதாகவும் பேட்டிங் செய்வார்கள். இவ்வாறு பேட்டிங் செய்கையில் ஆட்டம் அதிரடியாகவும் பலமாகவும் இந்திய அணிக்கு அமையும்.

Team India T20 WC

குல்திப் யாதவ் இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டால் இடது கை ஸ்பின்னர் அணியில் நிச்சயம் இருப்பார் . அவரை போல் சைனாமேன் ஸ்பின்னர் அணியில் இந்திய அணிக்கு இருப்பது சற்று கூடுதல் பலம். அதே நேரத்தில் சஹலை மறந்துவிட முடியாது அவர் தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ( ஒருநாள் , டி-20 ) . ஷார்த்துல் தாக்கூர் போன்ற ஒரு வீரர் சிறப்பான பந்து வீச்சும் மற்றும் ஓரளவிற்க்கான பேட்டிங்கும் இருப்பது இந்தியாவிற்கு பலம்.மேலும் பவர் ப்ளேயிலும் சிறப்பாக பந்துவிசக்கூடிய வீரரும் கூட.இறுதியில் புவனேஸ்வர் குமார் , ஜஸ்பிரித் பும்ரா மீதமுள்ள இடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிராட் ஹோட்ஜ் இந்திய X1

ரோஹித் ஷர்மா , விராட் கோலி , கே.எல்.ராகுல் , ரிஷப் பண்ட் ,ஹர்டிக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , ஷர்துல் தாக்கூர் , புவனேஷ்வர்குமார் , குல்திப் யாதவ் / யுகேந்திர சஹல் ,ஜஸ்பிரித் பும்ரா

- Advertisement -