ஜடேஜா ஆடவே கூடாது.. இந்த ரெண்டு மாற்றம் பண்ணுங்க.. இங்கிலாந்து அணி மண்ணை கவ்வும் – ஆஸி பிராட் ஹாக் பேட்டி

0
210
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு முக்கியமான இரண்டு மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறியிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் இரு அணிகளுக்கும் இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடுத்த மாதம் இரண்டாம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தது

இந்திய அணியின் பவுலிங் யூனிட் பலமாக இருப்பதாகவும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பலவீனமாக இருப்பதாகவும் தொடருக்கு முன்பாக கணிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர் மாறாக பேட்டிங் யூனிட் வலிமையாக காணப்படுகிறது, பவுலிங் யூனிட்டில் பும்ரா தவிர மற்ற யாரும் சிறப்பான நிலையில் இல்லை.

எனவே இந்திய அணியில் பவுலிங் யூனிட்டை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேட்டிங் வரிசை ஏழு வரையில் வைத்துக் கொண்டு, ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர் உடன், மொத்தம் ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரவீந்திர ஜடேஜாவை நீக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஜடேஜா வேண்டாம்

இது குறித்து பிராட் ஹாக் பேசும் பொழுது “நாம் தற்பொழுது ஜடேஜா சரிவைப் பார்க்கிறோமா என்றால் அது உண்மைதான். அவர் இந்திய சூழ்நிலைகளில் சிறப்பாக இருக்கிறார். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில் அவரால் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை. உங்களுக்கு இந்த இடத்தில் தாக்குதலாக சென்று விக்கெட் கைப்பற்றும் குல்தீப் யாதவ் தேவை. உங்களுக்கு ஏற்கனவே ஹோல்ட்இன் பௌலராக சிராஜ் இருக்கிறார். எனவே இந்த வேலையை செய்ய ஜடேஜா தேவையில்லை”

இதையும் படிங்க : ரோகித் இல்லனா இப்ப கேஎல் ராகுல் இல்ல.. எனக்கு அந்த வேலையை அவர்தான் தந்தார் – அபிஷேக் நாயர் விளக்கம்

“மேலும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளே வரும் பொழுது அங்கு ஜடேஜாவுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. எனவே ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் நீக்கிவிட்டு குல்தீப் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரையும் விளையாட வைக்க வேண்டும். மேலும் இந்திய அணி பவுலர்களை தேர்ந்தெடுப்பதில் தைரியமாக இருக்க வேண்டும். அவர்கள் தோற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தயங்க கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -