இங்கிலாந்து தொடருக்கு முன் ரோகித் சர்மாவை சீண்டிய பிராட் ஹாக் – உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்

0
192
Brad Hogg and Rohit Sharma

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தொடக்க வீரரும் , துணைக்கேப்டனுமான ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு 2007 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். மிடில் ஆர்டரில் தனக்கான இடத்தை பிடிக்க தடுமாறிய அவர் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற சாம்பியன்ஸ் டிராப்பியின் மூலம் தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் . லிமிட்டட் ஓவர்களை போலவே டெஸ்ட் போட்டியிலும் தனக்கென இடத்தை பிடிக்க ரோகித் சர்மா மிகவும் சிரமப்பட்டார். 2013 டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 2019 இறுதியில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பிடித்தார்.

தொடக்க வீரராக அறிமுகமான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்துள்ளார். ரோகித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்திய மண்ணில் மிக சிறப்பாக விளையாடியிருக்கிறார். அதேசமயம், வெளிநாடுகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை . தற்போது இந்திய அணி இங்கிலாநிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது .இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ரோகித் சர்மாவை சீண்டிய பிராட் ஹாக்

Rohit Sharma Test

இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் “ இந்திய மண்ணில் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் சராசரி என்பது 79 அதே சமயம் வெளிநாட்டு மைதானத்தில் அவரது சராசரி என்பது 27 தான் அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது சராசரி வெறும் 24 தான் இங்கிலாந்துக்கு எதிராக அவரது மிகவும் மோசமாகவுள்ளது . தற்போது இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் ,ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் மிகச்சிறப்பான தங்களது பங்களிப்பை தங்களது அணிக்கு வழங்கி வருகின்றனர். போட்டி டியூக் பந்தில் நடைப்பெறவிருக்கிறது இந்நிலையில் ரோஹித் ஷர்மாவிற்க்கு ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் தொடக்க வீரராக மிகவும் கடினம் .

எனவே ரோஹித் ஷர்மா இந்திய அணிக்காக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் . ஒருவேளை அவர் சிறப்பாக விளையாடினார் என்றால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.