இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து நினைக்கிறத இந்திய அணி செய்யனுமா?.. ஸ்டோக்ஸ் தப்பிக்கவே முடியாது – ஆஸி ஹேடின் பேச்சு

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்கூட்டிய டிராவை ஏற்றுக் கொள்ளாதது சரி என ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற விஷயங்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் தப்பிக்க முடியாது என பிராக் ஹேடின் கூறியிருக்கிறார்.

தொடரும் விமர்சனங்கள்

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் நீதியை மதிக்காமல் நடந்து கொண்டதாகவும், சட்டப் புத்தகத்தையும் மதிக்கவில்லை எனவும் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தரப்பில் இந்திய அணி செய்த விஷயத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் தொடர்ந்து கருத்து சொல்லி வருகிறார்கள். இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அன்றைய நாளில் நடந்து கொண்டதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என பிராட் ஹேடின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி செய்தது சரி

இதுகுறித்து பிராக் ஹேடின் பேசும் பொழுது ” நான்காவது டெஸ்ட் போட்டியின் முடிவு மிகவும் சுவாரசியமானது. ஏனென்றால் இந்தியாவில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனவே இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று நினைத்தது. ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அபாரமான சண்டையை வெளிப்படுத்தினார்கள்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டி 20.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபர் ரிஸ்வானுக்கு நடந்த பரிதாபம்.. இந்தியா வர மாட்டார்களா?

“இந்த நிலையில் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் வெற்றிக்காக விளையாடியது. ஆனால் வெற்றி கிடைக்காது என்ற பொழுது உடனடியாக டிரா செய்ய வந்தது. இந்திய அணி அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து நினைத்தது. ஆனால் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி பாதுகாப்பான இடத்திற்கு வந்த பிறகு தொடர்ந்து விளையாடியது. இதை நான் ஆதரிக்கிறேன். இந்திய அணி செய்தது சரியானது. இங்கிலாந்து நினைத்தவுடன் இந்திய அணி டிரா செய்து கொள்ள வேண்டும் என அவசியமில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts