வங்கதேசம் பிரீமியர் லீக் தொடரில் தமீம் இக்பாலுக்கும் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே களத்தில் எதிரணி வீரர்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள். ஆனால் தமீம் இக்பால் இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் அது போல் சிக்கியது கிடையாது.
ஆனால் பி பி எல் லீக் ஆட்டத்தில் தமீம் இக்பாலே, வம்பு இழுத்து அலெக்ஸ் கேரியை டென்ஷன் ஆக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. பார்ச்சூன் பாரிசால் அணியும்,ரங்பூர் ரெய்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பார்ச்சூன் அணி கேப்டன் தமீம் இக்பால் கடைசி ஓவரை நருல் ஹசன் என்ற 18 வயது நிரம்பிய வீரரை வீச சொன்னார்.
தமீம் இக்பால், அலெக்ஸ் ஹெல்ஸ் மோதல்:
ஆனால் தமீம் இக்பால் எடுத்த இந்த முடிவு மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது. கடைசி ஓவரில் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் விளாசி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்தனர். அப்போது பார்ச்சூன் அணி வீரர் இக்பாலுக்கும் ரைடர்ஸ் அணி வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ்க்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டபோது அங்கிருந்த வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து குற்றம் சாட்டியுள்ள அலெக்ஸ் ஹெல்ஸ்,” தம்மை பார்த்து தமீம் இக்பால், நீ போதை மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டாயா? இல்லை அந்த பழக்கம் இன்னும் இருக்கிறதா என்று கேட்டு என்னை அவமானப்படுத்தினார்.
மோதலுக்கு காரணம் என்ன?
இவ்வளவு மோசமாக தமீம் இக்பால் நடந்து கொள்வார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை” என்று அலெக்ஸ் ஹெல்ஸ் கூறியிருக்கிறார். இதனால்தான் கோபப்பட்டு அவரிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அலெக்ஸ் ஹெல்ஸ் கூறினார். எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமீம் இக்பால், “தாங்கள் வீடியோவை பார்த்தாலே தெரியும்.
அதில் அலெக்ஸ் ஹெல்ஸ் எங்கள் அணியின் 18 வயது வீரரிடம் தவறாக நடந்து கொண்டார். அது எனக்கு பிடிக்கவில்லை.
எப்படி எங்கள் வீரரிடம் நீங்கள் தவறாக பேசலாம் என நான் எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் எச்சரிக்கை செய்தேன். இது தான் நடந்தது ஆனால் அலெக்ஸ் ஹெல்ஸ் அதனை திரித்து கூறிவிட்டார்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.