இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் மற்றும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருவரும், இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இன்று பொறுப்பு எடுத்துக் கொள்கிறார்கள்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இன்று மூன்று கோட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணி மொத்தம் ஏழு பேட்ஸ்மேன்கள் மற்றும் 7 பந்து வீச்சு ஆப்ஷன்கள் என சென்றிருக்கிறது. இந்திய அணி ஆறு பந்துவீச்சு ஆப்ஷன்கள் மற்றும் பேட்டிங் வரிசை 8 வரையில் சென்று இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் எதிர்பார்க்கப்பட்டபடி கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். அடுத்த இரண்டு இடங்களில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சிவம் துபேவுக்கு பதிலாக ரியான் பராக் இடம் பெற்று இருக்கிறார்.
மேலும் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காத ரிங்கு சிங்குக்கு இந்த தொடரின் முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கிறார். மேலும் எட்டாவது இடத்தில் அக்சர் படேல், இவர்களைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் ரவி பிஸ்னாய், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் சிவம் துபே கலில் அகமது மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் பழைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போல் இல்லாமல், புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரியான் பராக் மற்றும் ரிங்கு இருவருமே விளையாடும் அணியில் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டிய இடம் இது கிடையாது.. அவர் அங்க வரணும் – 2007 உலக கோப்பை டீம் இயக்குனர் பேட்டி
டாஸ் நிகழ்வு முடிந்த பிறகு பேசிய சூர்யா குமார் யாதவ் கூறும்பொழுது ” இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது மேலும் முதலில் பேட்டிங் செய்வதும் நன்றாக இருக்கும். எங்களுடைய கிரிக்கெட் பிராண்ட் அப்படியே இருக்கிறது. எனக்கு கம்பீர் உடன் பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. டி20 உலகக் கோப்பை வரலாறு முடிந்து விட்டது. நாம் இப்பொழுது புதிதாக தொடங்குகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






