பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி முழு நாட்டில் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆச்சரியப்படும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி இருவரும் இடம் பெறவில்லை.
ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இடம் பெற்றிருக்கும் பொழுது இவர்கள் இருவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரிய கேள்வியை உண்டாக்கி இருக்கிறது. இவர்கள் இருவரும் இடம் பெறாத காரணம் என்னவென்று பார்க்கலாம்.
இவருக்கு வேகப்பந்து வீச்சில் ஷார்ட் பந்துக்கு எதிராக பலவீனம் இருக்கிறது. இந்த பலவீனம் அவரை சாதாரண பந்துகளிலும் ஆட்டம் இழக்க வைக்கிறது. காரணம் அவர் இந்த வகையான பந்துக்கு எதிர்பார்த்து இருப்பதால் மற்ற பந்துகளை விளையாடுவதற்கு சரியான நேரம் இருப்பதில்லை.
இன்னொரு பக்கத்தில் கடந்த வருடம் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சித் தொடரில் தன் மாநில அணியான மும்பைக்கு இவர் உடனடியாக விளையாட வரவில்லை. இதனால் கடுப்பான இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றியது. இதுவெல்லாம் தாண்டி அவர் கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாறி வருகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை கவலை அளிக்கிறது. எனவே இதன் காரணமாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.
ரஜத் பட்டிதாருக்கு இங்கிலாந்து தொடரில் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் வெகு சாதாரணமாக விக்கெட்டை இழந்தார். அதே சமயத்தில் சர்ப்ராஸ் கான் மூன்று அரை சதங்களை அதிரடியாக அடித்து கிடைத்த வாய்ப்பை அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டார். இப்போது ரஜத் பட்டிதார் ஃபார்ம் பிரச்சனை கிடையாது. ஆனால் அவருக்கு முன்னால் தேர்வு செய்ய வேண்டிய வீரர் இருப்பதால் தேர்வு செய்யவில்லை.
இதையும் படிங்க : ரவி சாஸ்திரி தந்த அந்தவொரு ஐடியா மாத்திடுச்சு.. ஆனா மக்கள் பேசற இந்த விஷயம் பிடிக்கல – ரிஷப் பண்ட் பேட்டி
முகமது ஷமி காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக போட்டிக்கு தயாராகி வருகிறார். பங்களாதேஷ் தொடருக்கு அவர் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அவர் அடுத்து ரஞ்சி கிரிக்கெட் சீசனில் பெங்கால் அணிக்காக களம் இறங்கி, அங்கிருந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விளையாட வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற இருவருக்கும் வாய்ப்பு இப்போதைக்கு கிடைப்பது மிகவும் கடினம்!