இந்தியா உட்பட படுதோல்விகள்.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டது.. அடுத்த முடிவு என்ன?

0
621
SLC

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்!

அதே சமயத்தில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்து வருகிறது. அவர்கள் இதுவரை ஏழு போட்டியில் ஆறு போட்டியை தோற்று இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் பெரிய புயல் அடித்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் இரண்டு சிறிய அணிகளை வென்று அதற்கு அடுத்து தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைப் பெற்று பரிதாப நிலைக்கு சென்றார்கள். இதில் ஆப்கானிஸ்தான் அணி உடன் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பூகம்பத்தை உருவாக்கியது.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு வந்தது இலங்கை அணி. ஆனால் இறுதிப் போட்டியில் 50 ரன்கள் இந்திய அணியிடம் சுருண்டு தோற்றது.

அப்பொழுது இறுதிப் போட்டிக்கு வந்த காரணத்தினால் இந்த தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதற்கு அடுத்து உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக மும்பையில் 55 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

- Advertisement -

இது இலங்கை கிரிக்கெட்டிலும் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விட்டது. தற்பொழுது அந்த நாட்டு அரசு இலங்கைக்கு கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இந்திய அணிக்கு எதிரான இரண்டு படுதோல்விகள்தான்.

தற்பொழுது 1996 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்காவை மற்றும் ஓய்வு பெற்ற சில முன்னாள் நீதிபதிகளை வைத்து தற்காலிகமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை முடிந்து நிரந்தரமான கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது!