நான் இந்திய பேட்ஸ்மேன்கள் ரப்பர் பேட் வைத்து மோசடி செய்யறாங்கனு சொல்லலை.. இதைத்தான் சொன்னேன் – ராஜபக்சே விளக்கம்

0
6
Banuka

தற்போது இலங்கை வீரர் பானுக ராஜபக்சே இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் குறித்து தனது கருத்தை திரித்து வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரப்பர் பேட்டை கொண்டு ரன் அடிக்கிறார்கள் என்று பானுக ராஜபக்சே கூறியதாக வெளிவந்த தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

பரவிய செய்தி

பானுக ராஜபக்சே கூறியதாக பரவிய செய்தியில் “இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டில் ஒரு லேயர் ரப்பரால் செய்யப்பட்டு இருப்பது போல உள்ளது. இதைக் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. இதனால்தான் அவர்களுக்கு அதீத சக்தி கிடைக்கிறது. இந்த வகையான பேட்டுகளை நம்மால் வாங்க முடியாது. இது அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது எல்லா வீரர்களுக்கும் தெரியும்” என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்திய அணி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடி வருகின்ற நேரத்தில் அவர் கூறிய இந்த கருத்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் உருவாக்கியது. திடீரென இந்தியா முழுக்க இந்த செய்தி தீபோல பரவ ஆரம்பித்தது. எனவே அவர் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

நான் சொன்னது இதுதான்

இதுகுறித்து பானுக ராஜபக்சே தனது மறுப்பு அறிக்கையில் கூறும் பொழுது “அனைவருக்கும் வணக்கம். நான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்த கருத்துக்கள் வித்தியாசமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே நான் இதற்கு கொஞ்சம் சுருக்கமாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நான் பேசிய கருத்துக்கள் மொழிபெயர்ப்பில் சரியான வகையில் மொழிபெயர்க்கப்படவில்லை”

இதையும் படிங்க : பாகிஸ்தான் கடைசியா கெஞ்சும்னு எனக்கு தெரியும்.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான்.. புத்தி வந்தா சரி – ஹர்பஜன் சிங் பேச்சு

“என் கருத்துக்கள் இந்திய கிரிக்கெட்டை பாராட்டிதான் இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன் அமைப்பு மற்றும் கட்டமைப்பு, மேலும் பயன்படுத்தும் உபகரணங்கள் வரையில் மிகத் தரமாக உள்ளது. அவர்களின் பேட் தயாரிப்பு உலகிலேயே மிகச் சிறந்தது. இதுதான் நான் சொல்ல வந்தது. பின்னர் நான் இதுகுறித்து சிந்தித்த பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம் என்று உணர்ந்தேன். நான் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட்டை மதிக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -