ஐசிசி அறிவித்த 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட வீரர்களுக்கும் அணிகளுக்கும் ஐசிசி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என தனித்தனியே அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக டி20 போட்டிகளுக்கான சிறந்த அணியை ஐசிசி அறிவித்தது. அதில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் என இந்திய அணியிலிருந்து அதிகபட்சமாக மூன்று பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியாவும் இடம்பெற்று இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்து அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் மற்றும் ஷாம் கர்ரன் ஆகிய இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியில் இருந்து முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ராவூவ் ஆகிய இருவரும் இடம்பெற்று இருக்கின்றனர்.
நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கை அணியில் இருந்து சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வணிந்து ஹசரங்காவிற்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது.
மீதம் இருக்கும் இரண்டு இடங்களில் இரண்டு அசோசியேட் அணிகளின் வீரர்கள் இடம்பெற்று இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. 2022ல் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்ட ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஒரு இடத்திலும், டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்த அயர்லாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் லிட்டில் ஒரு இடத்திலும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
2022 சிறந்த டி20 அணி – ஐசிசி: