சிஎஸ்கே அணியில் இணைந்த உற்சாகத்தில் பென் ஸ்டோக்ஸ் போட்ட ட்வீட்!

0
9394
CSK

ஐபிஎல் மினி ஏலம் தற்பொழுது கேரளா மாநிலம் கொச்சின் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறைவான வீரர்கள் பங்குபெறும் ஏலம் என்றாலும், ஒவ்வொரு அணியும் தங்களின் குறைகளை சரி கட்ட சரியான வீரர்களை எப்படி வாங்குகிறார்கள் என்பது இந்த ஏலத்தின் போக்கில் சுவாரசியமானதாக அமையும்!

இந்த வகையில் சென்னை அணி இந்த முறை நீண்ட காலமாக வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்து வந்த பிராவோவை அணியில் இருந்து நகர்த்தி பந்து வீச்சு பயிற்சியாளராக எடுத்துக் கொண்டது.

- Advertisement -

இதை அடுத்து இவரது இடத்திற்கு சென்னை அணிக்கு ஒருவர் தேவைப்பட்டார். இந்த ஏலத்தில் வேகப் பந்துவீச்சு வெளிநாட்டு ஆல் ரவுண்டராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோர் வந்தார்கள்.

இதில் ஏலத்தில் ஆரம்பத்தில் வந்த சாம் கரனை பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலையைக் கொடுத்து எடுத்தது. இதற்கு அடுத்து வந்த கேமரூன் கிரீனை மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச விலையை கொடுத்து எடுத்தது.

இந்த நிலையில் சென்னை அணி என்ன செய்யும் என்று எதிர்பார்த்து காத்து இருந்த வேளையில், வழக்கம்போல் சமயோசிதமாக பொறுமையாக இருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்சை 16.25 கோடி கொடுத்து எடுத்து அசத்தியது.

- Advertisement -

சிஎஸ்கே அணி தன்னை ஏலத்தில் எடுத்ததும் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணியில் இணைந்ததை குறிக்கும் விதமாக மஞ்சள் நிற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கான ட்விட்டர் லிங்க் கீழே!