“ஜெய்ஸ்வால் சூப்பர் ஸ்டார்.. ஆனா அந்த பெருமை எங்களுக்குதான்” – பென் டக்கெட் வித்தியாச பேச்சு

0
606
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல சுவாரசியமான தொடராக சென்று கொண்டிருக்கிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் மூன்று விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்த இந்திய அணி, அடுத்து ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சதம் அடிக்க முடிவில் 435 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கடுத்து இரண்டாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் குவித்து நன்றாக ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இறுதியில் 319 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். கில்லும் அரைசதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

தற்பொழுது இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இரண்டு விக்கட்டுகளை மட்டுமே இழந்திருக்கிறது. 326 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கும் இந்திய அணி, நாளை முன்னிலையை 500 ரன்கள் ஆக மாற்றினால், போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் பேசும்பொழுது “ஜெய்ஸ்வால் சூப்பர் ஸ்டார் ஆக உருவாகிறார். அவர் இன்று மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். எங்களிடம் எதிரணிகள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதற்கான பெருமை எங்களுக்குதான் சேரும்.

ஜோ ரூட் வெறித்தனமானவர். நம்மால் முடியாத பல விஷயங்களை அவர் செய்கிறார். அவர் ஆட்டம் இழந்த விதம் வெகு சாதாரணமான ஒன்று. மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்கும் முறை போல் தான் அதுவும். இங்கிலாந்தின் கோடை காலத்தில் இந்த ஷாட்டை அவர் மிக சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருந்தார். மக்கள் அப்போது எதுவும் சொல்லவில்லை.

இதையும் படிங்க : “800 ரன் எடுப்பிங்கனு கூச்சல் போட்டேன்.. ரூட் என்னை கவுத்திட்டியே” – அலைஸ்டர் குக் புலம்பல்

இன்று இந்தியா விளையாடிய விதத்திற்கு அவர்களுக்கு நிச்சயம் பாராட்டுகள் போய்ச் சேரவேண்டும். நேற்று மாலை நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால்இந்திய பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. நாங்கள் திருப்பித் தாக்கினோம் ஆனால் பலன் கிடைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.