ஜடேஜா, தோனி இல்லை… சிஎஸ்கே அணியை ஜெயிக்க வைத்தது மழை! – முன்னாள் சிஎஸ்கே வீரர் போட்ட ட்வீட்!

0
2638

“மழை வந்ததால் சிஎஸ்கே அணிக்கு அணிக்கு சாதகமாக வந்துவிட்டது. இல்லையென்றால் அவர்களால் வெற்றிபெற்றிருப்பது கடினம் என பேசியுள்ளார்.” இர்பான் பதான்!

அகமதாபாத்தில் 28ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் பைனல் மழை காரணமாக நடக்குமா? இல்லையா? போட்டி எப்படி முடியும்? என்கிற பல்வேறு குழப்பங்களுடன் நீடித்தது. 29ஆம் தேதி ரிசர்வ் நாள் அன்று, முதல் இன்னிங்ஸ் நன்றாக நடைபெற்றது.

- Advertisement -

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை சேஸ் செய்வதற்கு சிஎஸ்கே அணி களமிறங்கியபோது, திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தடைப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டி துவங்குவதற்கு தாமதமானது.

கடைசியாக 11.45 மணியளவில் நடுவர்களிடம் இருந்து வெளிவந்த அறிவிப்பின்படி, போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது. 12.10 மணியளவில் போட்டி துவங்கியது. டக்வோர்த்-லூயிஸ் முறைப்படி, 5 ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிகபட்சமாக ஒருவர் 3 ஓவர்கள் வீசலாம், 4 ஓவர்கள் வரை பவர்-பிளே இருக்கும் என்கிற அறிவிப்புகளும் வந்தது.

சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் கான்வெ இருவரும் ஓப்பனிங்கில் சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இது திருப்புமுனையாக இருந்தது. அடுத்து வந்த ரகானே விரைவாக 27 ரன்கள் அடித்துக்கொடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் அடித்து வெளியேறினார்.

- Advertisement -

சிவம் துபே மற்றும் ஜடேஜா ஒருவரும் கடைசி வரை உள்ளே நின்று சிறப்பாக பினிஷ் செய்து கொடுத்தார். சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது.

‘போட்டியில் மழை வந்ததன் காரணமாக சிஎஸ்கே அணியால் இந்த வெற்றியை சாத்தியமாக்க முடிந்தது. இல்லையெனில் மிகப்பெரிய சவாலில் முடிந்திருக்கும்.’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் சிஎஸ்கே வீரர் இர்பான் பதான்.

அவர் பதிவிட்டதாவது: “மழையின் குறுக்கீடு இருந்த ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணியினர் தங்களது பேட்டிங்கை ஷமி ஓவரில் துவங்கினர். 15 ஓவர்களாக குறைக்கப்பட்டதால், ரஷித் கான், ஷமி, மோகித் சர்மா ஆகிய மூன்று முன்னணி விக்கெட் எடுத்த பவுலர்களுக்கு தலா 1 ஓவர் என 3 ஓவர்கள் குறைந்தது. 18 பந்துகளில் 1 விக்கெட் கூட இழக்காமல் சிஎஸ்கே தப்பித்தது என்றே கூறவேண்டும். இது தான் சிஎஸ்கே அணிக்கு அட்வான்டேஜ்.”

இவரது பதிவு, மழை இல்லையென்றால் இப்போட்டி குஜராத் அணியின் பக்கம் சென்றிருக்கும். கோப்பையை சிஎஸ்கே வென்றிருக்காது எனும் தொனியில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.