இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் பிளே ஆப் செல்லும் அணியின் வீரர்களுக்கு.. இந்திய அணியில் இடமில்லை.. பிசிசிஐ முடிவு – காரணம் என்ன?

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் அடுத்தடுத்த தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய முடிவுகளை எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

நடப்பு 19 ஆவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இது தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்பில் முழு மும்முரமாக இறங்கும்.

இரண்டு தொடர்கள்

இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இதற்கு அடுத்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 என வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகவும், இந்திய புதிய டி20 அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்படும் என்பதாலும் இந்தத் தொடர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை

இந்தியா உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த தொடருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. ஐபிஎல் முடிந்து இந்த தொடர் உடனுக்குடனே வருகிறது.

இதையும் படிங்க : தோனி 3-4 பந்து மட்டுமே ஆடறது காமெடியான விஷயம்.. ஆனா அதுக்கும் அடிமைத்தன புகழ்ச்சி பேசினாங்க – மஞ்ச்ரேக்கர் கோபம்

எனவே இந்த டெஸ்ட் தொடருக்கு இந்திய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. குறிப்பாக பிளே ஆப் செல்லும் அணிகளில் உள்ள இந்திய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வெள்ளை பந்து தொடர்களுக்கு முக்கிய வீரர்களை புத்துணர்ச்சி உடன் வைப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது

- Advertisement -
Published by