2025ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு.. 4 டெஸ்ட், 5டி20, 3 ஒருநாள் போட்டிகள் எப்போது நடைபெறுகிறது.?. முழு விபரம்

0
32

ஐபிஎல் தொடர் முடிவு அடைந்தவுடன் இந்திய அணி நடப்பாண்டி பெரும்பாலும் வெளிநாட்டு தொடர்களில் தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது.

இந்த போட்டிகள் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் மற்றும் இலங்கையில் ஒரு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அந்த தொடர் முடிவடைந்த உடன் மீண்டும் அக்டோபர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் எதிரான போட்டி:

இப்படி பெரும்பான்மையான போட்டிகளை வெளிநாடுகளில் விளையாடும் இந்திய அணி நடப்பு ஆண்டு இரண்டு அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ அறிவித்திருக்கிறது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ள பிசிசிஐ முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்தத் தொடர் முடிவடைந்த உடன் தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தென்னாப்பிரிக்க தொடருக்கான அட்டவணை:

அதன் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வரும் வீரர்கள் தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நெடுந்தொடரில் பங்கேற்கிறார்கள்.  இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14ஆம் தேதி டெல்லியிலும், வரும் நவம்பர் 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்திகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் முதல் ஒருநாள் போட்டியும், டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியும், தென்னாப்பிரிக்காவுக்கு அணிக்கு எதிராக நடைபெறுகிறது.இந்த தொடர் முடிவடைந்த பிறகு டிசம்பர் 9ஆம் தேதி முதல் டி20 போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ரோகித் மலிங்கா இல்லை.. கெயில் வெளியிட்ட ஆல் டைம் ஐபிஎல் XI.. 4 சிஎஸ்கே வீரர்களுக்கு இடம்

  டிசம்பர் 11ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி சந்திகாரிலும், டிசம்பர் 14ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவிலும், டிசம்பர் 17ஆம் தேதி நான்காவது டி20 போட்டி லக்னோவிலும், டிசம்பர் 19ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் இம்முறை பிசிசிஐ ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -