இனி பெண்களுக்கும் ஐபிஎல் தொடர் – மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவு

0
74
Womens IPL

பிசிசிஐ தலைமையிலான ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆண்களுக்காக நடத்தப்படும் இத்தொடர் பெண்களுக்காகவும் நடத்தப்பட வேண்டும் என்று பல ரசிகர்கள் கடந்த ஆண்டு முதலே வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஒரு சில மகளிர் கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் ஐபிஎல் தொடர் நடைபெற போகின்றது. அடுத்த வாரத்தில் 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடரில் ஊடக உரிமைக்கான டெண்டர் நடைபெறப் போகின்றது. தற்பொழுது பிசிசிஐ கவுன்சில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை சம்பந்தமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

- Advertisement -
அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கான ஐபிஎல் தொடர்

பிசிசிஐ கவுன்சில் தரப்பில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. ஆறு அணிகளைக் கொண்ட தொடராக அது நடைபெறப் போகின்றது. இப்பொழுது ஆண்களுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணி நிர்வாகங்கள் விருப்பப்பட்டால் பெண்களுக்கான ஐபிஎல் தொடரிலும் தங்களுக்கென ஒரு அணியை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.அதற்கென தனி டெண்டர் நடைபெறும் என்றும் அதன் பின்னர் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் குறித்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் தற்பொழுது கரிபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்துவதைப் போல பெண்களுக்கென தனியாக மூன்று அணிகளைக் கொண்ட தொடர் ஒன்றை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமும் இதே போல ஒரு தொடரை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தற்பொழுது பிசிசிஐ அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்போவதால், இந்தியாவில் பெண்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டி இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கிரிக்கெட் வீராங்கனைகள் இனி இந்திய அணிக்காக விளையாட முன்வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -