ரகானேவை ஓரம் கட்ட திட்டம் – துணை கேப்டன் பதவிக்கு இரண்டு புதிய பெயர்கள் பரிந்துரை

0
313
Ajinkiya Rahane

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியின் வைஸ் கேப்டன் ரஹானே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அந்த டெஸ்ட் போட்டியில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே ரகானேவின் ஆட்டம் சகா சரியாக இல்லை என்றும் அவருக்கு பதில் மாற்று வீரரை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து ரசிகர்களின் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. வெளிநாட்டு தொடர்களில் முக்கியமான ஆட்டங்களில் ஒன்று இரண்டு சதங்கள் அடித்து இருந்தாலும் ரகானே இடம் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் தன்மை வெளிப்படவே இல்லை.

கடந்த 2016 நியூசிலாந்து தொடரில் 51 என இருந்த இவரது டெஸ்ட் சராசரி தற்போது 39 என்று ஆகிவிட்டது. இருந்தாலும் இந்திய அணி ரஹானேவை அணியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அவரது மோசமான ஆட்டங்களுக்கு மத்தியிலும் அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தது. கடந்த 56 தொடரிலேயே அவரது ஆட்டம் மோசமாக இருந்த உடன் அவரை பணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறினர். ஆனால் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடாத தான் அவருக்கு பதில் ரஹானேவை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. இதுதான்டா ஆணையருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் இதில் அவர் சிறப்பாக விளையாட தவறினால் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது.

- Advertisement -

அதேபோல ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடாததால் 2வது டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ரஹானே. மேலும் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட வில்லை என்றும் காயம் காரணமாக தான் நீக்கப் பட்டார் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது ரகானே வகித்து வரும் துணை கேப்டன் பதவியையும் அவரிடம் இருந்து பறிக்கப் போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் அந்த துணை கேப்டன் பதவிக்கு ரோஹித் அல்லது ராகுல் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்து உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இனிமேல் நல்ல ஆட்டத்தை விரைந்து வெளிப்படுத்தாவிட்டால் அணியில் ரஹானேவால் நீடிக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. வரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு ரகானே மற்றும் புஜாரா இருவருமே அணியில் இடம்பெறுவார்கள் என்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரகானே துணை கேப்டனாக விளையாடுவாரா அல்லது சாதாரண வீரராக விளையாடுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.