அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய அணி – இரண்டாம்தர அணியை ஆட வைக்க இந்தியா ஆலோசனை

0
1379
Rashid Khan and Ruthuraj Gaikwad

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது துவக்க வீரர் ரோகித் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வந்துள்ளது. காயத்தின் வீரியத்தைப் பொறுத்து ஒருநாள் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை கூற முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் விராட் கோலி தலைமையிலான அணிக்கு சிறந்த வாய்ப்பு ஒன்று காத்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா தொடரை முடித்த கையோடு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுடன் உள்நாட்டு தொடரில் விளையாடுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை இந்தியா ஆடுகிறது. இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச்சு மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகளில் சந்திக்க உள்ளது.

- Advertisement -

வளர்ந்து வரும் அணிகளுள் சிறந்த அணியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது அந்த அணிக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவதால் ஆப்கானிஸ்தானின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அந்த அணி வீரர்களுக்கு நன்கு தெரியவரும். ஆனால் இந்திய அணி வரிசையாக போட்டிகளில் விளையாடி வருவதால் அணியின் சீனியர் வீரர்கள் எல்லாம் இந்த ஆப்கானிஸ்தான் தொடருக்கு ஓய்வில் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஜூனியர் அணியை இந்திய அணி அனுப்பியது போல இந்த ஆப்கானிஸ்தான் தொடரிலும் இரண்டாம்தர அணி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஏற்றவாறு இரண்டாம்தர அணியே விளையாடுவதால் பரபரப்புக்கு இந்த தொடரில் பஞ்சம் இருக்காது என்று இப்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.