2022 இந்திய – தென் ஆப்பிரிக்கா டி20ஐ தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

0
5108
IND vs SA T20I Series 2022

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை தொடர்ச்சியாக 3 டி20 தொடர்களில் வெற்றி கண்டுள்ளது. நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடர்களில் 3-0 என்கிற கணக்கில் தொடர்ச்சியாக எதிர் அணிகளை ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மே மாதம் 29ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் ஜூன் மாதம் தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

- Advertisement -
போட்டி அட்டவணை வெளியீடு

தென் ஆபிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஜூன் 9ஆம் தேதி அன்று தொடங்கி ஜூன் 19-ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த ஐந்து இடெண்டிடி போட்டிகள் டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூரு நகரங்களில் நடைபெற உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 15 போட்டிகளில் மோதி இருக்கின்றன. அதில் ஒன்பது முறை இந்திய அணியும், ஆறுமுறை தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை இரு அணிகளுக்கு இடையே கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்தியாவில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, தொடரை சமனில் முடித்தனர்.

- Advertisement -