2022 ஐபிஎல் தொடர் 2 குரூப்கள் ; வெவ்வேறு பிரிவில் சென்னை & மும்பை – புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள பிசிசிஐ

0
2004
IPL Group A and B 2022

முந்தைய வருடங்களை போன்று அல்லாமல் இந்த முறை 2 குரூப் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய அணிகள் லக்னோ மற்றும் குஜராத் வருகையால் இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.அதன் படி குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கததா கினைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

2 குரூப் இருப்பதன் காரணமாக 2 புள்ளி பட்டியல் இந்த முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் முந்தைய வருடங்களை போன்றே ஒரே புள்ளி பட்டியல் தான் இந்த ஆண்டும் செயல் படுத்தப்படும் என்று பிசிசிஐ தற்பொழுது விளக்கம் கொடுத்துள்ளது.மேலும் முந்தைய வருடங்கள் போல புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குரூப் ஏ

1.மும்பை இந்தியன்ஸ்

2.கொல்கததா கினைட் ரைடர்ஸ்

3.ராஜஸ்தான் ராயல்ஸ்

- Advertisement -

4.டெல்லி கேபிடல்ஸ்

5.லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்

குரூப் பி

1.சென்னை சூப்பர் கிங்ஸ்

2.சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

3.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

4.பஞ்சாப் கிங்ஸ்

5.குஜராத் லயன்ஸ்

போட்டி விதிமுறைகள் :

குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை போட்டி போட வேண்டும். அதேபோல குரூப் பி பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை போட்டி போட வேண்டும்.
இதன் படி ஒவ்வொரு அணியும் 8 போட்டிகள் விளையாடி முடிக்கும்.

பின்னர் குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஒரு அணி குரூப் பி பிரிவில் தனக்கு நேர் வரிசையில் இருக்கும் அணியுடன் 2 முறையும், மற்ற அணிகளுடன் தலா முறை போட்டி போட வேண்டும். ( உதாரணத்திற்கு : குரூப் ஏ பிரிவில் இருக்கும் முதல் அணியான மும்பை குரூப் பி பிரிவில் இருக்கும் முதல் அணியான சென்னையுடன் 2 முறையும், மற்ற அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுடன் 1 முறையும் போட்டி போட வேண்டும்) இதன்படி ஒவ்வொரு அணியும் 6 போட்டிகள் விளையாடி முடிக்கும்.

அக ஒரு அணி தங்கள் பிரிவில் 8 போட்டியும் மற்ற பிரிவில் 6 போட்டியென மொத்தமாக 14 போட்டிகள் விளையாடி முடிக்க வேண்டும்.லீக் சுற்றில் அனைத்து அணிகளும் 14 போட்டிகள் விளையாடி முடித்த பின்னர், புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.பின்னர் குவாளிஃபையர் 1, எலிமினேட்டர், குவாளிஃபையர் 2 போட்டிகள் முடிந்து இறுதி போட்டி நடைபெறும்.

ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி அன்று நிறைவு பெற போகிறது.லீக் போட்டிகள் மும்பை (55 போட்டிகள்) மற்றும் புனேவில் (15 போட்டிகள்) நடைபெற போகின்றன. பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற போவது குறிப்பிடத்தக்கது.