ரிங்கு சிங் ருதுராஜ் ஜிதேஷ் சர்மாவுக்கு பிசிசிஐ அதிரடி திட்டம்; வெளியாக இருக்கும் மாஸ் அறிவிப்பு!

0
3225
Bcci

இந்திய அணி தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூலை 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது!

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூரியகுமார் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த அணியில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் முகேஷ் குமாருக்கு புதிதாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், ருதுராஜ் மற்றும் ஜிதேஷ் சர்மா மூவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்பொழுது இது பெரிய அளவில் வெளியில் விமர்சனம் ஆகி வருகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரையில் சீனாவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணியில் மேற்கண்ட மூவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணியில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் , குல்தீப், அக்சர் படேல் மற்றும் சாகல் போன்ற வீரர்கள் உலக கோப்பையின் காரணமாக விளையாட முடியாது.

எனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணிக்கு ஷிகர் தவானை கேப்டனாகவும் விவிஎஸ் லக்ஷ்மணனை பயிற்சியாளராகவும் கொண்டு, ரிங்கு சிங், ருதுராஜ், ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா, ராகுல் சஹர், அர்ஸ்தீப் சிங் மாதிரியான வீரர்களை தேர்வு செய்வதாக பிசிசிஐ திட்டம் வைத்திருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் ஜூலை 15ஆம் தேதி ஒலிம்பிக் ஆசிய கமிட்டி இடம் பங்கேற்கும் அணி வீரர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்காலத்தில் டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்த பிறகு அதிகப்படியான போட்டிகளில் பெரிய அணிகள் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்கின்றன. எனவே பெரிய அணிகள் இரண்டாவதாக ஒரு அணிக்கு வீரர்களை எப்பொழுதும் தயாராகவே வைத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரே அணி இரண்டு நாடுகளில் ஒரே நேரத்தில் விளையாடினால் கூட ஆச்சரியப்படுவதற்கு கிடையாது!