வந்தாச்சு எலக்ட்ரா ஸ்டம்புகள்.. இனி நடுவர்களே வேணாம் போல.. புதிய அறிமுகம்.. என்ன ஸ்பெஷல்.?

0
44619

சமீப காலங்களில் டி20 லீக் தொடர்கள் கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு என்பதை நோக்கி நகர்ந்து வருகிறது. டி20 லீக் தொடர்களை பார்க்கும் மக்கள் எண்டெர்டெயின்மெண்ட் ஆக வேண்டும் என்பதை மனதில் வைத்து அந்தந்த நாட்டு கிரிக்கெட் சங்கங்கள் டி20 லீக்குகளில் புதிய அம்சங்களை புகுத்தி வருகின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிசிசிஐ தரப்பில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. இதன் மூலமாக ஒவ்வொரு அணியின் பேட்டிங் செய்யும் போது ஒரு வீரரையும், பவுலிங் செய்கையில் மற்றொரு வீரரையும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமைந்தது.

- Advertisement -

இது ஐபிஎல் தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை அளித்தது. இந்த விதியால் பின் விளைவுகள் இருந்தாலும், பொழுதுபோக்காக பார்க்கப்படும் விளையாட்டில் தொடர்ந்து பரிசோதனை முயற்சியாக புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டே தான் இருக்க போகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டும் வரும் பிக் பேஷ் தொடரில் புதிய வகையிலான ஸ்டம்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்டம்பிற்கு எலக்ட்ரா ஸ்டம்ப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டம்புகளில் பந்து பட்டு சென்றால் லைட் எரியும் வகையிலான ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது எலக்ட்ரா ஸ்டம்புகளில் புதிய வகையிலான வண்ணங்களில் லைட்-கள் எரிவதுடன் நாடுவரின் பணிகளையும் சேர்த்து ஸ்டம்புகள் மூலமாக செய்யும் அளவிற்கு தொழிற்நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்த எலக்ட்ரா ஸ்டம்புகளில் 5 வகையான சிக்னல்களை அளிக்க முடியும். பேட்ஸ்மேன் அவுட் என்று தெரியும் பட்சத்தில், சிவப்பு நிறத்தில் லை எரிந்து பின்னர் நெருப்பு நிறத்தில் லைட் மாறும். அதேபோல் பவுண்டரி விளாசப்படும் பட்சத்தில் அனைத்து வகையிலான வண்ணங்கள் ஸ்டம்புகள் பிளாஷாக அடிக்கும். ஒருவேளை சிக்ஸ் அடிக்கப்பட்டால், அதே போல் அனைத்து வகையான வண்ணங்களில் லைட் எரிந்து மேல் நோக்கி செல்லும்.

- Advertisement -

ஒருவேளை பவுலர்கள் நோ-பால் வீசினால் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்டம்புகள் ஒளி ஸ்க்ராலாகும். அதேபோல் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையிலான நேரத்தில் பர்பிள் மற்றும் ப்ளூ நிறத்தில் ஒளி ஸ்க்ரால் செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகையிலான ஸ்டம்புகள் முதலில் மகளிர் பிக் பேஷ் தொடரில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆடவர் பிக் பேஷ் போட்டிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஸ்டம்புகள் இத்தனை விதிகளை கடத்த முடியுமா என்ற ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர். நடுவரின் பணியையும் சேர்த்து செய்வதால், வரும் காலத்தில் நடுவரே இல்லாமல் போட்டிகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.