இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பங்களாதேஷ் அணி தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6 குவாலியர் மைதானத்திலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 9 டெல்லி மைதானத்திலும், மூன்றாவது போட்டி அக்டோபர் 12 ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.
ஷாகிப் அல் ஹசன் நீக்கம்
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் அணியில் மூத்த மற்றும் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடிவிட்டதாக கூறியிருந்ததால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும், மேலும் அவருடைய இடத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மெகதி ஹசன் மிராஸ் சிறப்பாக வருவார் எனவும் பங்களாதேஷ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் தன்ஷித் ஹசன் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். மேலும் லெக் ஸ்பின்னர் ஆக மட்டுமில்லாமல் அதிரடி பேட்டர் ஆகவும் பலரது கவனத்தை கவர்ந்திருந்த ரியாத் ஹுசைன் இடம் பெற்றிருக்கிறார். ஐபிஎல் ஏலம் வரவிருக்கும் நிலையில் இவர் மிகவும் கவனிக்கப்பட கூடியவராக இருப்பார்.
மூன்று முக்கிய நட்சத்திர வீரர்கள்
இந்த தொடருக்கு சுழல் பந்துவீச்சாளர் மெகதி ஹசன், அனுபவ மூத்த வீரர் மகமதுல்லா, மிடில் வரிசை நட்சத்திர பேட்ஸ்மேன் தவ்ஹீத் ஹ்ரிடாய் ஆகியோர் மீண்டும் பங்களாதேஷ் டி20 அணிக்குள் வந்திருக்கிறார்கள். இந்த முறை டி20 தொடரில் இந்தியாவில் வைத்து இந்திய அணியை வெல்ல பங்களாதேஷ் அணி கடுமையாக முயற்சி செய்யும்.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான பங்களாதேஷ் அணி :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் ஏமன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, லிட்டன் குமர் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், தஸ்கின் அஹ்மத் மற்றும் ரகிபுல் ஹசன்.