ஐசிசி ஓடிஐ தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளியுள்ள பங்களாதேஷ் அணி

0
570
Bangladesh surpass Pakistan in ODI Rankings

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இதன் காரணமாக ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் புள்ளிகள் கணிசமாக குறைந்துள்ளது.92.5 புள்ளிகளுடன் தற்போது பாகிஸ்தான் அணி 7-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -
பாகிஸ்தான் அணியை ஓவர்டேக் செய்த பங்களாதேஷ் அணி

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று முடிந்தது. அதில் இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

தென் ஆபிரிக்கா அணி இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய அணியை 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், 3-0 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இருந்தது. தற்பொழுது அந்த அணியில் ஒரு சில முக்கிய வீரர்கள் இல்லாத காரணத்தினால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தொடரை வென்ற காரணத்தினால் பங்களாதேஷ் அணியின் ஐசிசி தரவரிசை புள்ளிகள் கூடியுள்ளது. தற்போது ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை புள்ளி பட்டியலில் 93.05 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
ஒருநாள் அணிகளுக்கான ஐசிசி தரவரிசை புள்ளி பட்டியல்

முதலிடத்தில் 121 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும், 119 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும், 110 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்திலும், 102 தென் ஆப்பிரிக்க அணி 5வது இடத்திலும் உள்ளன.

6ஆவது இடத்தில் மேற்குறிப்பிட்ட படி வங்காளதேச அணி 7-வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. 81 புள்ளிகளுடன் இலங்கை அணி 8வது இடத்திலும், 77 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 9வது இடத்திலும், 68 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி 10வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.