இந்திய கிரிக்கெட்

அபிஷேக் ஷர்மா இல்லைங்க.. அடுத்த யுவராஜ் சிங் இந்த பையன் தான்.. எழுதி வைக்கலாம் – பத்ரிநாத் கணிப்பு

தற்போது யுவராஜ் சிங் போல அதிக சக்தியுடன் பெரிய சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரராக அபிஷேக் ஷர்மா இருக்கிறார். இந்த நிலையில் சுப்ரமணியம் பத்ரிநாத் வேறொரு இளம் வீரரை யுவராஜ் சிங் போல அதிக சக்தியுடன் சிக்ஸர்கள் அடிப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடும் நேரங்களில் அவர் மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய வீரராக இருந்திருக்கிறார். முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் பிரெட்லீ பந்துவீச்சு 117 மீட்டர் சிக்ஸர் அடித்திருந்தார்.

ஜூனியர் யுவராஜ் சிங்

இந்த நிலையில் யுவராஜ் சிங் சிஷ்யன் அபிஷேக் ஷர்மா அவரைப் போலவே மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கடி அடிக்கக்கூடிய வீரராக இருந்து வருகிறார். அவர் ஒரு போட்டியில் நிலைத்து விட்டால் சிக்ஸர்களை சர்வ சாதாரணமாக விளாசக் கூடியவராக இருக்கிறார்.

மேலும் அவருடைய பேட் ஸ்விங் யுவராஜ் சிங் போலவே மிகவும் வேகமாக இருக்கிறது என ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார். எனவே அவரே இந்திய கிரிக்கெட்டில் அடுத்த யுவராஜ் சிங் என பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தப் பையனுக்கு சக்தி அதிகம்

இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும்பொழுது ” எனக்கு வைபவ் சூரியவன்சியை பார்க்கும் பொழுது இளம் யுவராஜ் சிங் ஞாபகம் வருகிறார். திறமை ஒருபுறம் இருக்க இந்த இளம் வயதில் வைபவ் சூரியவன்சி அடிக்கக்கூடிய பெரிய சிக்ஸர்கள் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அண்டர் 19 காலத்திலேயே யுவராஜ் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்கள் அடிப்பார். அதே அளவு சக்தி தற்போது இந்த சிறிய பையனிடமும் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது”

இதையும் படிங்க : ஒரு வீரரா கோச்சா சொல்றேன்.. சாம்சன் பேட்டிங்ல மாற்றம் வந்ததுக்கு காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் கருத்து

“வைபவ் சூரியவன்சிக்கு இது முக்கியமான ஐபிஎல் சீசன். அவருடைய முதல் சீசனான கடந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். தற்போது அவரைப் பற்றி எல்லா அணியின் பவுலர்களும் அறிந்திருப்பார்கள். எனவே அவருக்கு எதிராக திட்டங்களை வைத்திருப்பார்கள். இதனால் இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by