இதனால் தான் என்னை இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள் – ரொம்ப வெளிப்படையாக பேசிய கேஎல் ராகுல்!

0
850

மற்ற ஃபார்மட்டை விட ஒருநாள் போட்டிகளில் என்னை இன்னும் அணியில் வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கே எல் ராகுல்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டையும் கைப்பற்றி ஒருநாள் தொடரையும் கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி வருகிற 15ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 215 ரன்களுக்கு இலங்கை அணி ஆல்-அவுட் ஆனது. இதை சேஸ் செய்த இந்திய அணிக்கு 86 ரன்களில் நான்கு விக்கெட்டுகள் பறிபோயின. அப்போது கே எல் ராகுல் – ஹர்திக் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்து மிகவும் நிதானமாக தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 103 பந்துகளில் 64 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.

கே எல் ராகுலின் சர்வதேச ஃபார்ம் தொடர்ந்து கேள்விகளுக்கு உள்ளாகி இருந்தது. இவரை எதற்காக இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள்? என்கிற பல கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்திருக்கிறார் கேஎல் ராகுல்.

“மற்ற ஃபார்மட்டில் இருப்பதைவிட ஒருநாள் போட்டிகளில் எனக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கின்றன(கீப்பிங் செய்வதை பற்றி பேசினார்). அதேபோல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி செட்டில் ஆவதற்கு நேரம் கொடுக்கிறார்கள். இத்தனை போட்டிகள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் என் மீது பொறுமை காத்து வந்ததால் மட்டுமே என்னால் 100% ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.

- Advertisement -

இந்த இரண்டு பொறுப்புகளும் எனது ஆட்டத்தை புரிந்து கொள்வதற்கு நிறைய உதவினாலும், நீண்ட காலம் கழித்து கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டும் செய்வதால் எளிதாக சோர்வடைந்து விடுகிறேன். இன்னும் சில போட்டிகளில் உடல் அளவில் எனக்கு பழகிவிடும் 2019, 2020 ஆகிய ஆண்டுகளிலும் 2021 ஆம் ஆண்டு சில போட்டிகளிலும் கிப்பிங் செய்திருக்கிறேன். எனக்கு இது ஒன்றும் புதிதல்ல.

எனக்கு கிடைத்திருக்கும் ரோல் எப்படி என்றால் சில போட்டிகளில் இறங்கிய உடனே அதிரடியாக விளையாட வேண்டும். சில போட்டிகளில் விக்கெட் இழக்காமல் பொறுமை காத்து விளையாட வேண்டும் அதற்கேற்றவாறு தான் ஒவ்வொரு போட்டிகளிலும் செயல்படுகிறேன்.

ஐந்தாவது இடத்தில் களமிறங்குவதற்கு எனது பேட்டிங்கில் சில மாறுதல்களில் செய்ய வேண்டியது இருக்கிறது. பந்தில் வேகம் இருந்தால் எனது பேட்டிங்கிற்கு ஏதுவாக இருக்கும். ஓபனிங் செய்யும்போது பவர்-பிளே ஓவர்களில் விளையாடுவதற்கும் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது. அதற்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.” என்றார்