அதிக அடிப்படை விலைக் கொண்ட பாகிஸ்தான் சூப்பர்ஸ்டார் பாபர் அசாம் ‘ தி 100 ‘ லீகில் விற்கப்படாத விநோதம்

0
565
Babar Azam unsold in The Hundred League

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து, ஒருநாள் போட்டி 60 ஓவர்கள் என மாறி, அது 50 ஓவர்கள் என குறைக்கப்பட்டு, பின்பு கிளப் போட்டிகளில் 40 ஓவர்கள் போட்டிகளாக நடத்தப்பட்டு, அடுத்து 20 ஓவர் போட்டிகள் அறிமுகமாகி, சர்வதேச அளவில் வெற்றிக்கரமான கிரிக்கெட் வடிவமாக கோலோச்சுகிறது.

இந்த நிலையில் இருபது ஓவரில் இருந்து நூறுபந்து போட்டிகளை, புதிய விதிகளோடு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு நூறுபந்து போட்டியில் மஹேல ஜெயவர்த்தனா தலைமைப் பயிற்சியாளராய் இருந்த செளதர்ன் பிரேவ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான இங்கிலாந்தின் நூறுபந்து போட்டிகளில் பங்கேற்க பிரபல வீரர்கள் பலர் பெயர் குடுத்திருந்தனர். இதில் ஆச்சரியப்படும் விதமாய் பாகிஸ்தானின் நதீம்ஷா போன்ற இளம் வீரர்கள் வாங்கப்பட, வார்னர் போன்ற பெரிய வீரர்கள் விலைபோகாமல் இருந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் ஐ.பி,எல்-ல் பங்கேற்க முடிந்தால் அதிக விலைக்குப் போவாரென்று அக்தர் கூறியிருந்த பாபர் ஆஸம் விலைபோகவில்லை. இன்றைய தேதிக்கு இவர்தான் வெள்ளைப்பந்து போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீரர்!

மேலும் ஆஸ்திரேலியாவின் மூன்று வடிவ கிரிக்கெட்டின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வார்னர், ஆஸ்திரேலியாவின் வெள்ளைப்பந்து போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச், அதிரடி அசகாய வீரர் “தி பாஸ்” கிறிஸ் கெயில் போன்றவர்களும் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -