உலக கிரிக்கெட்

102 ரன்ஸ் தேவை.. கிரிக்கெட் வரலாற்றில் கோலி ரோகித் மட்டுமே செய்த சாதனை.. பாபர் அசாமுக்கு பெரிய வாய்ப்பு

வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராகி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் தொடரில் இன்னும் 102 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய ஜாம்பவான் வீரர்கள் ஆன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்ததாக சாதனை பட்டியலில் இடம் பிடிக்க பாபர் அசாமுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய பாபர் அசாம் தற்போது வீரராக பாகிஸ்தான் அணியில் விளையாடி கொண்டு வருகிறார். ஷான் மசூத் தலைமையில் களமிறங்க உள்ள பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் நான்காவது வரிசையில் களமிறங்க இருக்கிறார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3898 ரன்கள் குவித்துள்ளார். ஐந்து நாள் ஆட்டத்தில் 4000 ரன்கள் குவிப்பதற்கு பாபர் அசாமுக்கு இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது.

வக்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரின் மூலம் பாபர் அசாம் இந்த ரன்கள் குவிப்பதோடு மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் 4000 ரன்கள் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும், மூன்றாவது சர்வதேச வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார்.

- Advertisement -

பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக 117 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5729 ரன்களும், 123 டி20 போட்டிகளில் விளையாடி 4145 ரன்கள் குவித்து இருக்கிறார். இரண்டு வடிவ கிரிக்கெட் தொடரிலும் ஏற்கனவே 4000 ரன்கள் கடந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் 102 ரன்கள் தேவைப்படுகிறது.

இதற்கு முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்த சாதனையை ஏற்கனவே படைத்திருக்கிறார்கள். இந்திய அணியின் விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் 4000 ரன்கள் கடந்த வீரராக இருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியின் போது விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதையும் படிங்க:உலக கோப்பை தோல்வியில் இருந்து.. இப்படித்தான் மீண்டு வந்தேன்.. ரொம்ப கஷ்டப்பட்டேன்- தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரத்து 13,906 ரன்களும், டி20 போட்டிகளில் 4188 ரன்கள் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4137 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 10866 ரன்கள், டி20 தொடரில் 4231 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts