“ஆப்கான் தோல்விக்குப் பிறகு பாபர் அசாம் அழுதிருக்கிறார்..!” – உண்மையை வெளியிட்டு முகமது யூசுப் அதிரடியான பேச்சு!

0
937
Babar

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் பெரிய நாடுகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்து வந்தன.

மேலும் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கக்கூடிய இந்தியா 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானம் மிகவும் குறைவானது. இதனால் அவர்களால் உள்நாட்டு கிரிக்கெட்டை வளர்த்தெடுப்பதில் தடங்கள் ஏற்பட்டது. இதை எதிர்கால பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான அச்சுறுத்தலாக மாறியது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் உத்வேகத்தை மற்ற இளைஞர்கள் பெறும்விதமாக, உலகத்தரமான வீரராக பாபர் அசாம் வெளிப்பட்டார். அவர் தற்போதைய கிரிக்கெட் உலகின் ராஜாவாக இருந்து வரும் விராட் கோலியின் சில சாதனைகளையும் முறியடித்தார். இது உள்நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது.

மேலும் நிலைமைகள் சுமுகமாக ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தன. இதன் காரணங்களால் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் பாபர் அசாம் தலைமையில் வேகம் எடுக்க ஆரம்பித்தது. ஆசியக் கோப்பைக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.

- Advertisement -

ஆனால் ஆசியக் கோப்பை தொடங்கியதும் நிலைமைகள் அப்படியே தலைகீழாக மாற ஆரம்பித்தது. ஏனென்றால் பாகிஸ்தான் அணி தன்னுடைய நாட்டை விட்டு வெளியில் வந்து விளையாடியது. ஆசியக் கோப்பையிலும், தற்போது நடைபெறும் உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் பலவீனங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பெரிய அணிகளுக்கு எதிராக தோற்கும் வரை பிரச்சனை இல்லாமல் இருந்தது.ஆனால் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றது ஒட்டுமொத்த நிலைமையையும் சிக்கலாகிவிட்டது. கேப்டன் பாபர் அசாம் மீது ஒரு புள்ளியில் விமர்சனங்கள் நிறைய குவிக்கின்றன. அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலமான குரல்கள் முன்னாள் வீரர்கள் தரப்பில் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது யூசுப் பேசும்பொழுது “ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு பிறகு பாபர் அசாம் அழுததாக நான் கேள்விப்பட்டேன். இது பாபர் தவறு மட்டுமில்லை. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி நிர்வாகமும் இந்த தவறில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். மேலும் ஒட்டுமொத்த தேசமும் அவருடன் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்.