4,4,4,4,4.. மாஸ் காட்டிய பாபர் அசாம்.. ஆனா 105 ரன்னில் சுருட்டிய ரிஸ்வான் அணி.. 9 ஒற்றை இலக்க பரிதாபம்

0
251
Babar

தற்போது பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சாம்பியன்ஸ் ஒன் டே கப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பாபர் அசாம் விளையாடும் அணி 105 ரன்கள் சுருண்டு முகமது ரிஸ்வான் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால்,தற்போது நடைபெற்றவர்களும் உள்நாட்டு தொடர் ஒன் டே கப் தொடருக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

முஹம்மத் ரிஸ்வான் அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற மார்க்ஹோர்ஸ் அணியின் கேப்டன் முஹம்மத் ரிஸ்வான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் 24 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் முகமது ரிஸ்வான் 39 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நட்சத்திர வீரர்கள் ஆகா சல்மான் 72 பந்துகளில் 51 ரன்கள், இப்திகார் அஹமத் 66 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் ஜகான்தத் கான் 4, மெக்ரான் மும்தாஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

சுருண்டு படுதோல்வி அடைந்த பாபர் அசாம் அணி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ஸ்டாலியன் அணிக்கு ஷான் மசூத் 21 பந்தில் 19 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் 44 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். இதில் தகானி வீசிய ஆட்டத்தில் எட்டாவது ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரி அடித்து அசத்தினார்.

இதையும் படிங்க : நான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு எப்பவும் துரோகம் செய்யல.. நடந்த உண்மை இதுதான் – பிராவோ பேட்டி

இதற்கு அடுத்து மீதி இருந்த ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். இதன் காரணமாக பாபர் அசாமின் ஸ்டாலியன் அணி 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. முஹம்மத் ரிஸ்வான் அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஜாகீர் மக்மூத் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -