திரும்பவும் கேப்டனான பாபர் அசாம்.. டி20 உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
182

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான செயல்பாட்டின் காரணமாக அரை இறுதிக்குத் தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தது.

இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கு பெற்ற ஒன்பது போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 1992 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி 2023ஆம் ஆண்டில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தையே பிடித்தது. இதனால் பாபர் ஆசாம் பதவி விலகியதைத் தொடர்ந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிற்கு வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் ஷா அப்ரிடியை கேப்டனாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

- Advertisement -

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஷான் மசூத் கேப்டனாக தொடர்கிறார். சாகின் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அண்மையில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. அதில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடங்க இருப்பதால் திறமையான கேப்டன் மற்றும் அணியினருடன் செல்ல திட்டமிட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இதனால் கேப்டனான வேகப்பந்துவீச்சாளர் சாஹின் ஷா அப்ரிடியைக் கேப்டன் பதவியில் இருந்து விலக்கி ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு பாபர் ஆசாமையே மீண்டும் கேப்டனாக அறிவித்தது.

புதிதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவராக மொஹ்சின் நக்வி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் தேர்வு குழு ஒரு மித மனதோடு மீண்டும் கேப்டனாக பாபர் ஆசாமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் இருக்கிறது. இதனை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் தகுதியான பேட்ஸ்மேன்கள் என அனைவரும் இருந்தும் சிறந்த அணித் தலைவர் இல்லாததால் சமீப காலமாக சுமாரான பங்களிப்பையே வெளிப்படுத்தி வருகிறது. இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடர்களில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தக் கூடிய பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை போன்ற பெரிய ஐசிசி தொடர்களில் அச்சுறுத்தும் அணியாக மாறிவிடும்.

இதையும் படிங்க: 20 வருடங்கள் பின் முத்தரப்பு தொடர் நடத்தும் பாகிஸ்தான்.. 2 பெரிய கிரிக்கெட் நாடுகள் சம்மதம்

எந்த நேரத்திலும் தங்களது திறமையை நிரூபிக்கக்கூடிய தகுதியான வீரர்கள் அந்த அணியில் எப்போதும் இருக்கிறார்கள். எனவே வருகிற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.