ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செய்யாத ஒரு அரிய சாதனையை நிகழ்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தான அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஓமர்சாய் விளங்கியிருக்கிறார்.
நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் பந்து வீச்சுக்கு வந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஓமர்சாய் ஆப்கானிஸ்தான் அணிக்கு பரபரப்பான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி
பொதுவாக உலக கிரிக்கெட்டில் ஒவ்வொரு பெரிய கிரிக்கெட் நாடுகளும் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதற்கு மிகவும் போராடிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டில் மிகவும் சிறிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஓமர்சாய் கிடைத்திருக்கிறார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அணிக்கு தாக்கத்தை தருகிறார்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவரை பார்த்த சச்சின் டெண்டுல்கர் ” இவருடைய ரிஸ்ட் பொசிஷன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இவரைப் பார்க்கும் பொழுது எனக்கு இந்தியாவின் பிரவீன் குமார் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும் என பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் செய்யாத சாதனை
நேற்றைய போட்டியில் ஓமர்சாய் பேட்டிங்கில் 41 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுவரையிலான சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பேட்டிங்கில் 40 ரன்கள், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் யாரும் கைப்பற்றியது கிடையாது. இந்த வகையில் ஓமர்சாய் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஆப்கான் அணியை இனிமே அப்படி சொல்லாதீங்க.. வேற மாதிரி பண்ணிட்டாங்க – சச்சின் வாழ்த்து
மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் இலக்கை பாதுகாக்கும் பொழுது ஐந்து விக்கெட் கைப்பற்றியவர்களாக ஜாக் காலிஸ், மகாயா நிட்டினி, ஜேக்கப் ஓரம், கிளன் மெக்ராத் ஆகியோர் இருந்தார்கள். இந்த வகையில் தற்பொழுது இலக்கை பாதுகாக்கும் பொழுது ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஐந்தாவது வீரராக ஓமர்சாய் இணைந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






