இந்திய கிரிக்கெட்

டி20 WC பைனல்.. விராட் கோலி மீது வந்த விமர்சனம்… அக்சர் பட்டேல் சொன்ன ஒரு வார்த்தை.. வைரலாகும் பதிவு

2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய ஆக்சர் பட்டேல், விராட் கோலியுடன் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். ஆக்சர் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் எடுக்க, விராட் மறுபுறம் நிதானமாக விளையாடி இந்திய அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தார்.

- Advertisement -


விராட்டின் அந்த இன்னிங்ஸை வெளியில் இருந்து சிலர் விமர்சித்தாலும், அந்த நேரத்தில் அணிக்குள் இருந்த வீரர்களுக்கு அவரது பங்களிப்பின் மதிப்பு நன்றாகத் தெரிந்திருந்ததாக ஆக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்சார் பட்டேல் கூறும்போது
“வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ட்ரோல் செய்வது மிகவும் எளிது. ஆனால், அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அந்த நேரத்தில் விராட் மறுமுனையில் இருந்ததால் நான் சுதந்திரமாக விளையாடினேன். நான் அவுட்டாகிவிட்டாலும் விராட் நிலைமையை சமாளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் என்னால் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முடிந்தது. இறுதியில் விராட் அந்த இன்னிங்ஸை சிறப்பாக எடுத்துச் சென்றார். அணிக்குள் இருக்கும் வீரர்களுக்குத்தான் அவரது மதிப்பும், அந்த இன்னிங்ஸின் முக்கியத்துவமும் புரியும். அந்த சூழ்நிலையில் விராட் அப்படித்தான் விளையாட வேண்டியிருந்தது. அதுதான் முக்கியம்” என்று ஆக்சர் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by