நான் வாங்கிய இந்த ஆட்டநாயகன் விருது மருத்துவமனையில் இருக்கும் என் தாய்க்குச் சமர்ப்பணம் – ஆவேஷ் கான் உருக்கமான பேச்சு

0
172
Avesh Khan Man of the Match LSG

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பனிரெண்டாவது ஆட்டத்தில் லக்னோ அணியை எதிர்த்து, ஹைதராபாத் அணி நவி மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் விளையாடியது. இந்தப் போட்டியில் இதுவரை தொல்லை தந்த பனிப்பொழிவு இல்லையென்பது குறிப்பிடத்தக்கது!

ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி லக்னோ அணிக்குத் துவக்கம் தர வந்த குயிண்டன் டிகாக், எவின் லீஸ், மனீஷ் பாண்டே அடுத்தடுத்து ஆட்டமிழந்து, லக்னோ அணியை நெருக்கடியில் தள்ளினர்.

- Advertisement -

ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கே.எல்.ராகுலுடன் இணைந்த தீபக் ஹூடா இருவரும் அரைசதமடித்து அணியை மீட்டு, கெளரவமான 169 என்ற ஸ்கோரை எட்ட வைத்தனர். ஆனால் ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி 44, நிக்கோலஸ் பூரன் 34, இந்த இருவரை தவிர யாரும் பொறுப்பாக விளையாடததால் 157 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. ஆவேஷ்கான் மிகச்சிறப்பாக நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிதோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்!

ஆட்ட நாயகன் விருதுபெற்ற ஆவேஷ்கான் அணியின் சகவீரர் தீபக் ஹூடாவிடம் சில விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் “இந்த ஆட்டநாயகன் விருதை என் அம்மாவுக்குச் சமர்பிக்கிறேன். தற்பொழுது அவர் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். அவர்களிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு இந்த வேளையிலும் கிடைத்தது. ஆட்டம் முடிந்ததும் காணொளி (வீடியோ) அழைப்பில் அழைத்து அவரிடம் பேசினேன். இப்போது அவர் கடவுளின் கருணையால் நலமாக உள்ளார்!” என்று தெரிவித்திருந்தார்.