கடைசி 2 டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. முக்கிய வீரர் நீக்கம்.. 19 வயது வீரர் அறிமுகம்.. 3 மாற்றங்கள்

0
7393
Australia

இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

19 வயது வீரர் சேர்ப்பு

இதைத் தொடர்ந்து இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பகல் இரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் அடித்திருந்த 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே இந்த அணியில் இருந்து காயத்தின் காரணமாக ஜோஸ் ஹேசில்வுட் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இடத்திற்கும், மேலும் கூடுதலான ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கும், புதியதாகவும் இரண்டு வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இரண்டு வீரர்கள் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர்களாக ஜய் ரிச்சர்ட்சன் மீண்டும் அணிக்கு திரும்பி வந்திருக்கிறார். மேலும் இன்னொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சீன் அபோட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அணியில் 14 வீரர்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 15 வீரர்கள் ஆக மாறி இருக்கிறது.

மேலும் இந்த மாற்றங்களுடன் முன்பிருந்ததை விட ஆஸ்திரேலியா அணி இன்னும் கொஞ்சம் வலுவாகவே மாறி இருக்கிறது என்று சொல்லலாம். எனவே கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கிறது.

இதையும் படிக்க : 32 பந்து 63 ரன்.. கம்ரான் அதிரடி ஆட்டம்.. திரும்ப கிளாசனின் போராட்டம் வீண்.. 2வது ஒருநாள்.. பாக் அபார வெற்றி

ஆஸ்திரேலியா அணி : பாட் கம்மின்ஸ் (கே), டிராவிஸ் ஹெட் (து.கே), ஸ்டீவ் ஸ்மித் (விசி), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், ஜை ரிச்சர்ட்சன் , மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர்.

- Advertisement -