ஆஸ்திரேலியா அணியின் முன்னணி டெஸ்ட் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் தான் இன்னும் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை? என்பதற்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தற்போது முன்னிலையும் வகிக்கிறது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரும் உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளருமான சேன் வார்னே ஆதிக்கம் செலுத்தி ஓய்வு பெற்ற பிறகு, அந்த பாரம்பரியத்தை எடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கியமான பொறுப்பை நாதன் லயன் செய்திருக்கிறார்.
மேலும் 13 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரையில் 119 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியும் இருக்கிறார். இந்த நிலையில் தன் ஓய்வு குறித்தும் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து யார் கேப்டனாக வரலாம்? என்பது குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நாதன் லயன் பேசும்பொழுது ” எனக்குள் ஓய்வு குறித்த எண்ணங்கள் வரவே செய்கிறது. ஆனால் நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று அர்த்தம் கிடையாது. நான் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வெல்ல விரும்புகிறேன். இங்கிலாந்து மண்ணில் ஆசஸ் தொடரையும், மேலும் இன்னொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையும் வெல்ல விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகள் இதற்கு விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : அடுத்து பும்ரா இதைத்தான் செய்யப் போறார்.. இங்கிலாந்து ஏமாற வேண்டாம் – மார்க் வுட் கணிப்பு
“நான் பார்த்த வரையில் அடுத்து ஆஸ்திரேலியா அணியை வழிநடத்திச் செல்ல அலெக்ஸ் கேரி சரியானவராக இருப்பார். அவர் களத்திற்கு உள்ளே மட்டும் இல்லாமல் வெளியேயும் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறார். எனவே அடுத்த கேப்டனுக்கான சிறந்த வேட்பாளராக நான் அவரையே சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.