இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்கு பந்து வீசுவதில்.. மிகவும் வெறுப்பான பகுதி இதுதான்.. ரொம்ப சோதிப்பாரு – ஆஸி லெக் ஸ்பின்னர் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலியின் இன்னிங்ஸ் குறித்து ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் ஆஷ்டன் ஆகர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்திய அணி சிறப்பான வெற்றி

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இரண்டு விக்கெடுகளை இழந்த போதும் விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இதில் குறிப்பாக விராட் கோலி எந்தவித அழுத்தத்தையும் இந்திய அணிக்கு ஏற்படுத்தாமல் தொடர்ந்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டிருந்தார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் அவருக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய அணி வலுவான நிலையை அடைந்தது.

98 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 5 பௌண்டரிகள் மட்டும் அடித்து 84 ரன்கள் குவித்து இருக்கிறார். பெரும்பாலும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து சிங்கிள்கள் அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் விராட் கோலிக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் ஏற்படுத்த முடியாது என ஆஸ்திரேலியா லெக் ஸ்பின்னர் ஆஸ்டன் ஆகர் விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவருக்கு பந்து வீசுவதில் மிகவும் வெறுப்பூட்டக்கூடிய விஷயமே இதுவாகும் இன்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

அழுத்தத்தை உருவாக்குவது கடினம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அவருக்கு பந்து வீசுவதில் மிகவும் வெறுப்பூட்டும் பகுதி இதுதான். அவர் பவுண்டரி லைனை சேதப்படுத்துவது மட்டுமல்ல, சிங்கிள் ரொட்டேட் செய்து அவர் மீது அழுத்தம் உருவாகாமல் பார்த்துக் கொள்வார். அவர் பேட்டிங் செய்தால் அவர் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த முடியாது என்பது தான் உண்மை. மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இது போன்ற ஆடுகளங்கள் அதிகமாக கிடைக்காது.

இதையும் படிங்க:2025 ஐபிஎல் சீசன்.. தோனி எதிர்பார்க்காத இதை செய்வார்.. அது நடக்கத்தான் போகுது – கும்ப்ளே கருத்து

உங்கள் சிறந்த பந்தை மிடில் ஸ்டம்ப் திசையில் சற்று மேல் விலகிச் சென்று சுழன்று வரும் போது மற்றவர்களை விட விராட் கோலி பேட்டின் முகப்பகுதியை பிடித்துக் கொண்டு அடிக்க அவருக்கு அற்புதமான திறன் உள்ளது. கவர் பாயிண்ட் திசையில் அந்த ஷார்ட் அடிப்பதற்கு விராட் கோலியை தவிர உலகில் சிறந்தவர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். மேலும் அவர் மீது அழுத்தத்தை உருவாக்குவது கடினம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts