ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அடுத்த இரண்டு மாதங்கள் ஓய்வில் இருக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலியா வருவதை குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை வென்று இருக்கிறது. மேலும் இதனிடையே இந்தியாவில் நடைபெற்ற பொழுதும் வென்று இருக்கிறது. தற்பொழுது இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் உயர்வானதாகவும் கௌரவமாகவும் பார்க்கிறது. எனவே இந்திய அணியிடம் உள்நாட்டில் இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்திருப்பது அவர்களை பெரிய அளவில் அவமானப் படுத்தி இருக்கிறது. எனவே எப்படியாவது இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்ற பெரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இது குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியிருந்தபொழுது தற்பொழுது அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்.எல்.சி டி20 லீக்கில் விளையாடிவிட்டு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வெள்ளை பந்து தொடரில் ஓய்வெடுக்க போவதாகவும், இந்திய அணி ஆஸ்திரேலிய வரும்பொழுது மிகவும் வலிமையுடனும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பாட் கம்மின்ஸ் கூறும் பொழுது ” நான் அடுத்து சில காலம் ஓய்வெடுப்பதாக இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அடுத்த முழு சீசனையும் விளையாடுவதற்கான திட்டமாகும். ஆறு அல்லது எட்டு வாரங்கள் நான் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு அதற்குப் பின் அங்கிருந்து பில்டப் செய்ய வேண்டும். எம் எல் சி தொடரில் விளையாடும் வாய்ப்பு வந்தது எதையும் மாற்றவில்லை.
நான் அமெரிக்காவில் விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றதும் 6 முதல் 8 வாரங்கள் நான் ஓய்வில் இருப்பேன். அப்பொழுது நான் ஜிம்மிற்கு சென்று கொஞ்சம் ஓட்ட பயிற்சி மட்டும் செய்வேன்.பின்னர் எங்களுக்கு கோடை காலத்தில் ஒரு பெரிய டெஸ்ட் தொடராக இந்திய அணிக்கு எதிரான தொடர் இருக்கிறது. அதுதான் எங்களுக்கு எல்லாவற்றுக்கும் மையமாக இருக்கும்.
இதையும் படிங்க : ஷமி இந்த மாதிரி பேசினா.. 365 நாள்ல 300 நாள் அழுதுட்டுதான் இருப்பீங்க – பாக் பஷீத் அலி எச்சரிக்கை
தற்போது கிரிக்கெட் விளையாடும் எல்லாரும் எதார்த்தத்தை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் வருடத்திற்கு 10 மாதங்கள் தொடர்ந்து விளையாட்டில் இருக்கிறோம். இதில் சில சுற்றுப்பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். அப்படியான முக்கிய தொடர்களில் மூன்று வடிவங்களில் விளையாடும் வீரர்கள் உச்சத்தை தொடுகிறார்கள். மேலும் கடந்த 18 மாதங்களில் மட்டும் பத்து முக்கிய தொடர்களில் நாங்கள் விளையாடியதைப் போல நான் உணர்கிறேன். எனவே என் உடலுக்கு கவனம் கொடுப்பதற்கான சரியான இடைவெளி கிடைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.