தற்போது ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் நடைபெற்ற போட்டியில் முதல் டிராவிஸ் ஹெட் 25 பந்தில் 80 ரன்கள் அடித்து நொறுக்க வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
ஜோஸ் இங்லீஷ் சாதனை
இன்று இரண்டாவது போட்டிக்கான டாசில் வென்ற ஸ்காட்லாந்து முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு முதல் போட்டியில் அசுரத்தனமாக அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.
இன்னொரு துவக்க ஆட்டக்காரர் அதிரடி இளம் வீரர் ஜாப் பிரேசர் மெக்கர்க் 16 பந்துகளில் 16 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் விளையாடுவதற்காக இந்த முறை கேப்டன் மிட்சல் மார்ஸ் களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்றாவது வரிசையில் வந்த ஜோஸ் இங்லீஷ் அடித்து நொறுக்கினார். 43 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த அவர் 49 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் குறைந்த பந்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். இதைத் தொடர்ந்து கேமரூன் 29 பந்தில் 36, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 20 பந்தில் 20 ரன் எடுக்க, 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
ஸ்காட்லாந்து தோல்வி
வலிமையான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு மூன்றாவது இடத்தில் வந்த பிரண்டன் மெக்முலன் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 42 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். முன்சி ஆறு பந்தில் 19 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க :
இந்த இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார்கள். மற்ற ஒன்பது பேட்ஸ்மேன் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். ஸ்காட்லாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.