உலக கிரிக்கெட்

கடைசி ஓவர் 16 ரன்.. அலட்சியமான ஆஸி.. திடீரென பாய்ந்த பாகிஸ்தான் அணி.. சுவாரசியமான போட்டி முடிவு.. 2வது டி20

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவிற்கு வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி இரண்டுக்கு ஒன்று எனக் கைப்பற்றியது. இதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்று இருந்தது.

மீண்டும் கலக்கிய ஹாரிஸ் ரவுப்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 17 பந்தில் 32 ரன்கள், ஜாக் பிரேசர் 9பந்தில் 20 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.

இதைத்தொடர்ந்து பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 20 பந்தில் 21 ரன், ஆரோன் ஹார்டி 23 பந்தில் 28 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 4, அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ஏமாற்றிய பாபர் அசாம்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக வந்த பாபர் அசாம் 3 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கேப்டன் முகமது ரிஸ்வான் 26 பந்தில் 16 ரன், ஃபர்கான் 10 பந்தில் 5 ரன், ஆகா சல்மான் கோல்டன் டக் அடித்து வெளியேறினார்கள். பாகிஸ்தான அணி 44 ரன்களில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வி உறுதி என்று நினைத்தபொழுது உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். ஆட்டம் பரபரப்பாக பாகிஸ்தான் அணி கைவசம் ஒரு விக்கெட் இருக்க கடைசி ஓவருக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலைமையில் ஆட்டத்தை நகர்த்தி வந்த இர்பான் கான் 27 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மீதம் இருந்த ஒரு விக்கெட்டை இழந்து, பாகிஸ்தான் அணியால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க : பெர்த் முதல் டெஸ்ட்.. இந்திய நட்சத்திர வீரர் காயம்.. விளையாடுவது 99% சந்தேகம்.. பெரிய பின்னடைவு.. வெளியான தகவல்கள்

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி பரபரப்பான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஒரு கட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவோம் என அலட்சியத்தில் இருக்க பாகிஸ்தான் அணி திடீரென சிறப்பாக விளையாடி பயம் காட்டியது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களை வெற்றிகரமாக மாற்ற முடியாததால் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -
Published by

Recent Posts