வெறும் 33 ஓவர்.. ஹேசில்வுட் மேஜிக் கைவரிசை.. திடீரென சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. ஆஸி மீண்டு வந்து அசத்தல் வெற்றி

0
91
Hazlewood

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிரடியாக திரும்பி வந்த ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.

தற்போது மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

- Advertisement -

முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வேகப் பந்து வீட்டுக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் ஜெய்டன் சீல்ஸ் 5, சமார் ஜோசப் 4 விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 180 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஹெட் 59 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஷாய் ஹோப் 48 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை கிடைத்தது. ஸ்டார்க் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி

இதற்கு அடுத்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வேகமாக இழந்து தடுமாறியது. இந்த நிலையில் பியூ வெப்ஸ்டர் 63, ஹெட் 61, அலெக்ஸ் கேரி 61 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா அணி அபாரமாக 310 ரன்கள் குறித்தது. சமார் ஜோசப் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 31 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பும்ரா இருந்தாலும்.. அந்த வீரர் இல்லனா இந்திய அணியால் டெஸ்ட் தொடரை ஜெயிக்க முடியாது – ஆஸி மைக்கேல் கிளார்க் கணிப்பு

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் கலக்கிய ஆஸ்திரேலியா பந்து வீச்சிலும் கலக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 33.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் ஹேசில் வுட் அபாரமாக பந்து வீசி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி முதல் டெஸ்டில் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -