தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங்கில் சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது தென் ஆபிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பவர் பிளேவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா 7.4 ஓவரில் 76 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியது. கேமரூன் கிரீன் அதிரடியாக 13 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் மாபாகா 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆஸ்திரேலியா சிறப்பான பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் தாக்குப்பிடித்து விளையாடி 55 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : கோலி, ரோகித் தொடர்பாக வந்த ஓய்வு செய்தி.. உண்மையை உடைத்த கங்குலி.. என்ன நடந்தது?
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் பேட்மேனாக சூரியகுமார் யாதவை தாண்டி டிம் டேவிட் சாதனை படைத்தார்.
167.37- டிம் டேவிட்
167.07 – சூர்யகுமார்
164.32 பில் சால்ட்
163.79 ஆண்ட்ரே ரஸ்ஸல்
163.27 – ஃபின் ஆலன்
159.15-டிராவிஸ் ஹெட்
156.44-காலின் மன்றோ
155.64 க்ளென் மேக்ஸ்வெல்