இந்திய கிரிக்கெட்

81 ரன்கள் 9 விக்கெட்.. ஸ்மிருதி மந்தனா சாதனை சதம் வீண்.. இந்திய அணியை ஆஸி ஒயிட் வாஸ் செய்தது

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஒயிட் வாஸ் ஆகியது.

- Advertisement -

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அந்த அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா சதத்தை வீணடித்து தோல்வியடைந்து இருக்கிறது.

அன்னாபெல் சதர்லேண்ட் அசத்தல் சதம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க லிட்ச்ஃபீல்டு 33 பந்தில் 25 ரன்கள், ஜார்ஜியா வோல் 30 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெரி 14 பந்தில் 6 ரன்கள், பெத் மூனி 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட பேட்டிங் வரிசையில் ஐந்தாவது வந்த அன்னாபெல் சதர்லேண்ட் அதிரடியாக விளையாடி 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து கார்டனர் 64 பந்தில் 54 ரன்கள், தாகிலா மெக்ராத் 50 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. அருந்ததி ரெட்டி நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

ஸ்மிருதி மந்தனா சாதனை சதம் வீண்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு துணை கேப்டன் ஸ்மருதி மந்தனா மிகச் சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் சதம் அடித்து 105 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து அதிகபட்சமாக மூன்றாவது இடத்தில் வந்த ஹர்லின் டியோல் 64 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. இங்கிருந்து மேற்கொண்டு 81 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட் இழந்து மொத்தமாக 215 ரன்கள் எடுத்துச் சுருண்டது. ஆஸ்திரேலியா அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஸ் செய்தது. கார்டனர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 221 ரன்கள்.. ரகானே ஷிவம் துபே அதிரடி.. சூர்யா ஸ்ரேயாஸ் ஏமாற்றம்.. மும்பை அணி செமி பைனலுக்கு தகுதி.. SMAT 2024

இந்த வருட கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது நான்காவது சதமாக அமைந்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என ஸ்மிருதி மிந்தனா சாதனை படைத்தார்.

- Advertisement -
Published by

Recent Posts